இங்கே உனக்கு என்ன காரியம்? 59-0301E 1. சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. நான் இந்தக் காலையில் கூறினது போன்றே, கர்த்தருடைய வீட்டிற்கு வருவது எப்பொழுதும் நன்மையாகவே உள்ளது. 2 அன்றொரு நாள் என்னுடைய வீட்டில் அவள் பாட நான் கேட்டிருந்த ஒரு பாடலை இன்றிரவு பாடுவதற்கு, நான் இங்கு சிறு பெண் பிள்ளைகளை அழைக்கும் ஒருவிதமான நோக்கத்தில் இருந்தேன். நமக்கு அதற்கான நேரம் இன்னும் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். அவள் அதிக நாணமடையாமலிருந்தால் நலமாயிருக்கும். செல்வி ஜெப்ரீஸ் அவர்களே, அங்கே நீங்கள் பாடின அந்த சிறு பாடலைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நான் உள்ளே வந்தபோது, அது பாடப்படுவதைக் கேட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் உங்களை அந்தப் பாடலை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்வதனால், உங்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அவருடைய நாமத்தை எனக்குச் சொல்லுங்கள் அல்லது அதைப் போன்றே ஏதோ ஒரு பாடல். அது இது தானே? நான் அதை மீண்டுமாகக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் யாவருமே அதைக் கேட்டு மகிழ்வீர்கள் என்று நான் அறிவேன். 3 [ஒலிநாடாவில் காலியிடம். அவருடைய நாமத்தை மீண்டும் எனக்குச் சொல்லுங்கள் என்னும் பாடலை சகோதரி ஜெப்பரீஸ் பாடுகிறாள்.—ஆசி.] 4 ஓ, நான் அதை விரும்புகிறேன்! நான் அவருடைய நாமத்தை நேசிக்கிறேன். அந்த சிறுபெண்ணைப் பாடவைக்கும்படிக்கு என்னை நினைக்கத் தூண்டியது எது என்று உங்களுக்குத் தெரியுமா? அவள் என்னுடைய சிறு பெண் ரெபேக்காளுக்கு பள்ளித் தோழியாயிருக்கிறாள். நான் அன்றொரு நாள் காலை திரும்பி வந்து, என்னுடைய அறையில் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தபோது, நான் அவள் அந்தப் பாடலை பாடுவதைக் கேட்டேன். அப்பொழுது நான், “பாருங்கள், எப்போதாவது நான் அவளை சபையில் அதைப் பாட வைக்க வேண்டும்” என்று எண்ணினேன். 5 நான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற வழியில், நான் பாடுவதைக் குறித்து அவளிடத்தில் பேசினேன். அதற்கு அவள், “நான்…அப்படியே எழும்பியபோது…” என்றாள். நான் அதே வார்த்தைகளில் அதைக் கூறாமலிருக்கலாம். ஆனால் அவள், “அன்றொரு இரவு நான் எழுந்தபோது, இல்லை. படுக்கையிலிருந்தபோது, அந்தப் பாடலைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் அதனால் அப்பேற்பட்ட ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறினாள். 6 பாருங்கள், அப்பொழுது நான், “விசேஷமாக இந்தச் சமுதாயத்தில், இந்தப் பட்டிணத்தில் உள்ள பதின்மூன்றிலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்ட ஓர் இளம் பெண், அவளுக்கு உண்டான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தைக் குறித்துப் பேசுவதென்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாயுள்ளது” என்றே எண்ணினேன். நமக்கு அதைப்போன்று உள்ள பருவப் பெண்களே அதிகம் தேவை. நாம் அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளுவதையே விரும்புகிறோம். 7 இங்கே ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த மற்றொரு சிறு பெண்ணும் கூட பாடினாள். அவளுடைய பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த சிறு பிள்ளைகள், பத்தொன்பது வயதிற்குட்பட்ட அந்த சிறு பெண் பிள்ளைகள் பாடினதைக் கேட்டு மகிழ்ந்தேன். நாம் நடந்து செல்லும் போது உண்டாகிற அடிச்சுவடுகள் மற்றவர்களுக்கு மாதிரியாயுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையாகவே அவைகள் மாதிரிகளாயிருக்கின்றன. 8 சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு பழைய சம்பவம், அதாவது இங்கிலாந்தில் ஒரு மனிதன் இருந்தானாம். அவன் கிறிஸ்துமஸ் நேரத்தின்போது வெளியே சென்று ஒரு சிறு நட்பின் ஐக்கியத்திற்காக மது அருந்தலாம் என்று எண்ணினானாம். அப்பொழுது அவன் தன்னுடைய அயலகத்தார் மத்தியில் சென்று, தன்னுடைய அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொண்டிருக்க, அப்பொழுது ஒவ்வொருவரும் அவனிடத்தில், “ஜான், இப்பொழுது இந்த மதுவிலிருந்து சற்றுப் பருகு” என்று கூறினராம். எனவே இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் சிறுக சிறுக குடித்தபடியால், அவன் உண்மையாகவே போதை கொண்டவனானான். 9 அப்பொழுது அவன் வீட்டிற்கு வீதியில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சுமார் ஆறு அங்குல கன அளவுகொண்ட பனிமழை உண்டாயிருந்ததாம். அவனுடைய சிறு பையன் அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தானாம். இவனால் தன்னுடைய மகனை அழைத்துச் செல்ல முடியவில்லையாம். அவன் அதிகமாய் குடித்துவிட்டிருந்தான். எனவே வீட்டிற்கு தன்னுடைய வீதி வழியாக செல்லும்போது, அவன் தற்செயலாக திரும்பி தன்னுடைய சிறு பையன் பனிமழையில் புரளுவதைக் கவனிக்க நேர்ந்ததாம். அப்பொழுது அவன், “மகனே, நீ ஏன் பனி மழையில் புரண்டுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டானாம். 10 அதற்கு அவனோ, “அப்பா, நான் உங்களுடைய அடிச்சுவடுகளையே பின் தொடர்ந்து வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்றானாம். அப்பொழுது அவன் அந்த சிறுவனை தன்னுடைய கரங்களால் தூக்கியெடுத்து, “தேவனே, இந்நாள் முதற்கொண்டு நான் ஒரு போதும் மது அருந்தவே மாட்டேன்” என்று கூறினானாம். 11 யாரோ ஒருவர் உங்களுடைய அடிச்சுவடுகளை பின்பற்றப் போகிறார்கள். எனவே நாம் தொட்டிலிருந்து கல்வாரி வரையிலும் உள்ள அந்த நேர்ப்பாதையில் நடப்போமாக. அதுவே அடிச்சுவடுகளாகும்; நாம் அவர்களை அதில் நடக்கச் செய்வோமாக. 12 இப்பொழுது, இன்றிரவு இராப்போஜன இரவாயுள்ளது என்பதை நான் அறிவேன். எனவே நான் வார்த்தையைக் கொண்டு ஒரு குறுகிய நேரம் மட்டுமே உங்களிடத்தில் பேச வேண்டியவனாயுள்ளேன். நான்—நான் அவரைக் குறித்துப் பேச விரும்புகிறேன். ஏனென்றால், அவர் எனக்கு அவ்வளவு மெய்யானவராயிருக்கிறார். 13 நான் கொஞ்சம் காலத்திற்கு முன்னர் பத்திரிக்கையில் வெளிவரும் ஒரு சிறு கட்டுரையில் இதை வாசித்துக் கொண்டிருந்தேன். நான் மீண்டும் அந்தப் பெண்பிள்ளைகளைக் குறித்து சிந்தித்தேன். இது மேற்குப் பகுதியில் சம்பவித்திருந்தது. ஒரு புயலார்ந்த இரவில் ஊளையிடுதலின் எதிரொலியும், காற்றும் பலமாக வீசிக்கொண்டிருந்ததாம். அப்பொழுது அங்கே சில ஜனங்கள் ஒரு ஜெபக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த ஜெபக் கூட்டத்தை நடத்தின அந்தப் பெண்மணியோ மிகவும் கவர்ச்சிகரமான ஒரு அழகான பெண்ணாயிருந்தாளாம். அவளுக்கு இருந்த ஆபத்தைக் குறித்து அவள் சிந்திக்கவேயில்லையாம். ஆனால் அவள் அந்தச் சிறு பட்டிணத்திற்கு குறுக்கேயிருந்த ஒரு விதமான மூலை முடுக்கில் வசித்து வந்தாளாம். ஆனால் வழக்கமாக இரவு நேரத்தில் அந்த வீதிகளில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்களாம். அந்த ஜெபக் கூட்டத்தின் முடிவின்போது, கர்த்தருக்கென்று அவர்கள் பாடல்களை பாடிக் கொண்டிருந்த போது, அவர்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சி கொண்டிருந்தனவாம். சற்று நேரத்திற்கு முன்னர் சகோதரன் பீலர் (Beeler) சாட்சி பகர்ந்தபோது உண்டாயிருந்தது போன்றே, அவர்கள் யாவரும் அதைக் குறித்து உணர்ந்திருப்பர் என்று நான் யூகிக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தனராம். அவர்களால் அந்த சந்தோஷத்தை அடக்கிக்கொள்ள முடியாதிருந்ததாம். ஆயினும் அதை ஏதோ ஒரு விதத்தில் சற்று விட்டுச்செல்ல வேண்டியிருந்ததாம். அங்கே கடைசியாக “ஆமென்” என்று கூறப்பட்டப் பிறகு, அவர்கள் யாவரும் தங்களுடைய வழியில் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று விட்டார்களாம். 14 அப்பொழுது அந்தச் சிறு வாலிபப் பெண்மணியோ தன்னுடைய மகளிர் மேற்சட்டையை எடுத்து அணிந்து கொண்டு, கழுத்துப் பட்டையைத் தூக்கிவிட்டு, மேற்சட்டையின் முன்புறத்தை பொத்தான்களால் பூட்டி, வீதியிலே நடக்கத் துவங்கினாளாம். அந்தக் குளிரார்ந்த இரவோ அவர்கள் ஒவ்வொருவரையும் குளிர்காயும் தங்களுடைய வீட்டு அனல் கணப்பண்டைக்கு விரைந்தோடச் செய்திருந்தது என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவள் மாத்திரம் தனிமையாய் வீதியில் இருப்பதை அறிந்தாள். அப்பொழுது ஏதோ ஒரு அபாயம் அவளை நோக்கி வட்டமிடத் துவங்குவது போன்று தென்பட்டதாம். 15 உங்களுக்குத் தெரியுமா? வந்து கொண்டிருக்கிற அந்தக் காரியங்களைக் குறித்து, அந்த அபாயங்களிலிருந்து தப்பிக்க பரிசுத்த ஆவியானவரால் அதைக் குறித்து நம்மை எச்சரிக்க முடியும் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 16 அவளோ பயத்தைக் குறித்தே சிந்தனையற்றவளாயிருந்தாளாம். அவள், கைவிடமாட்டார், கைவிடவேமாட்டார் என்ற அந்தப் பழைய பாடலைப் பாடினாளாம். அவள் அந்த நகரத்தினூடாக நடந்து சென்றபோது, எவருமே அவளை தொல்லைப்படுத்தப்போவதில்லை என்பது போன்று தென்பட்டதாம். ஆனால் திடீரென்று அவளுக்குப் பெரிதான ஒரு பயம் உண்டானதாம். அவள் நோக்கிப் பார்த்தபோது, அவளுக்கு அருகில் இருந்து இந்தவிதமாக கரங்களை கட்டிக்கொண்டு, பயங்கரமான தோற்றங் கொண்ட ஒரு மனிதன் அவளை நோக்கி வருவதைக் கண்டாளாம். 17 அதிலிருந்து தப்பிக்க வழியேயில்லாதிருந்ததாம். இது ஒரு உண்மைச் சம்பவமாகும். ஆகையால் அவளால் ஓட முடியவில்லையாம், ஏனென்றால் அவ்வாறு ஓடினால் அவன் பிடித்துக் கொள்வான். அப்பொழுது ஒரே ஒரு காரியம்தான் செய்ய வேண்டியதாயிருந்ததாம். அவளால் கூச்சலிடவும் முடியாதிருந்ததாம். ஏனென்றால் காற்றோ மிகவும் பலமாக வீசிக்கொண்டிருந்ததாம். அதாவது அவளுடைய சரீரத்தையே வீதியிலிருந்து தூக்கிச் செல்லுமளவிற்கு வீசிக்கொண்டிருந்ததாம். எனவே அவளால் எவரும் கேட்கும்படி ஒருபோதும் கூச்சலிட முடியாதிருந்ததாம். அந்தப் பனிமழையோ கண்ணை மறைத்துக் கொண்டிருந்ததாம். 18 அப்பொழுது ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய வேண்டியதாய் இருந்ததாம். அது ஜெபமாயிருந்ததாம். ஆகையால் அவள் தன்னுடைய தாழ்ந்த குரலில் தேவனிடத்தில் இரகசியமான முறையில் ஜெபத்தை ஏறெடுக்கத் துவங்கினாளாம். அப்பொழுது உடனடியாக திடீரென்று ஒரு வாசலின் அருகே மிகப் பெரிய ஒரு நாய் நின்றதாம். ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியவே தெரியாது என்று கூறினாளாம். அந்த நாய் தன்னுடைய முடியை சிலிர்த்தவாறு நிற்பதோடு, அவளுக்கு அருகில் நடந்தசென்று அந்த மனிதன் இருந்த பக்கமாக வந்து மிகவும் கொடூரமான முறையில் உறுமி குரைத்துக்கொண்டே அந்த மனிதனுக்கு அருகில் சென்றதாம். அப்பொழுது அந்த மனிதன் அந்த வீதியை விட்டு சென்றவுடனே அந்த நாய் திரும்பி வந்து அந்த வாசலண்டையிலேயே படுத்துக் கொண்டதாம். 19 தேவன் தமக்கு சொந்தமானவர்களுக்காகவே அக்கறை கொள்வார். தேவன் சில நேரங்களில் தம்முடைய மகிமையையும், தம்முடைய பாதுகாப்பையும் காண்பிக்கும்படிக்கு ஒரு நாயின் ஊடாகவோ அல்லது ஒரு மிருகத்தினூடாகவோ அல்லது வேறெதோ வழியினூடாகவோ கிரியை செய்கிறார். என்னுடைய பாவங்களின் மன்னிப்பிலும், நான் என்னுடைய பாவங்களை அவரிடத்தில் தினந்தோறும் அறிக்கையிடும்போது, அவைகள் இரத்தத்தின் கீழ் இருக்கின்றன என்ற உறுதியோடு, நான் அவரை அறிந்துள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 20 இந்தக் காலை செய்தியில் நான் சற்று கரடுமுரடாக அல்லது சற்று நயமற்ற முறையில் பேசனதாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால் அது ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கான பொருள் கொண்ட விளக்கச் செய்தியை அதிகமாக கொண்டிருக்கவில்லை. ஆனால் இதை அறிந்துகொள்ள நான் போதிய காலம் ஜீவித்து விட்டேன். சகோதரன் டோனி, (Tony) ஒரு மனிதன் ஒரு காரியத்தைச் செய்ய வழி நடத்தப்படுவதை உணருகிறபோது, அவன் அதைச் செய்வானேயானால், அப்பொழுது தேவன் அதனுடைய எஞ்சிய காரியத்தை ஒரு தனி சிறப்பு வாய்ந்த முறையில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இது இங்கே முதன் முறையாக அந்தவிதமாக சம்பவித்தது. நாம் வழக்கமாக ஜெப அட்டைகளைக் கொடுக்க, ஜனங்களோ எழும்பி நிற்பர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் கட்டிடத்தில் எத்தனை அந்நியர்கள் இருக்கிறார்கள் என்று என்னைக் கொண்டு கேட்டு, கட்டிடம் முழுவதுமே அதைச் செய்து நிறைவேற்றுவார். அப்பொழுது அவர் அவர்களுடைய வாஞ்சைகளை அவர்களுக்கு வெளிப்படுத்துவார். பின்னர்…அவர்களுடைய சுகமளித்தல் போன்றவற்றை அறிவிப்பார். அது “பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” என்பதைக் காண்பிக்கிறது. 21 ஆகையால் இன்றிரவு இங்கே ஒரு சில நிமிடங்கள் பேசுவதற்காக நான் ஒரு சிறு வேதப்பகுதியை தெரிந்தெடுத்துள்ளேன். நாம் அதை செய்வதற்கு முன்பு, ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் தாழ்த்துவோமாக. 22 கர்த்தாவே, நீரே என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். ஜெபம் என்னும் முறையில் நாங்கள் உமக்கு முன்பாக வரும் சிலாக்கியத்தை பெற்றுள்ளதற்காக நாங்கள் உமக்கு நன்றியையும், துதியையும் செலுத்துகிறோம். முதலாவது “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று எங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நீர் எங்களுடைய வேண்டுகோளுக்கு பதிலளிப்பீர் என்ற உறுதியை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம். 23 ஏற்கனவே ஏராளமானவற்றிற்கு பதிலளிக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாங்கள் ஆராதனையை முடித்துக்கொண்டு, வீட்டிற்கு செல்வோமேயானால், அப்பொழுது நாங்கள், “இங்கே இருந்தது நன்மையானதாகவே இருந்தது” என்று கூற முடியும் என்பதை நாங்கள் உணருகிறோம். கூட்டத்தார் பாடின இந்த சீயோனின் கீதங்களை கேட்டீரே! ஜெபத்திலும், தியானத்திலும், கீர்த்தனைகளிலும் ஜனங்கள் தங்களுடைய குரல்களில் கூறினவைகளைக் கேட்டீரே! வேதமோ, “உங்களுடைய இருதயங்களில் ஞானப்பாட்டுகளைப் பாடி மகிழுங்கள்” என்று கூறுகிறதே. பதின்மூன்று முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்தச் சிறு பருவப் பெண்பிள்ளைகள் பாடினதையும் கேட்டீரே! நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த அந்தகார வேளையில், எங்களுடைய சகோதரன் பீலர் அவர்களின் மூலமாக இன்றிரவு தெளிவாக வெளிப்படுத்திக் கூறப்பட்டது போல, சீயோனின் பாடல்களை அவர்கள் பாடக்கேட்டோம். சகோதரன் பீலர் எப்படியாய் பாராட்டினார் என்பதையும், நீர் என்ன செய்திருந்தீர் என்பதையும், இப்பொழுது அந்தக் கரம் இல்லாமல் அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர் உணரும்படி எப்படி நீர் அவரை முடமாக்கினீர் என்பதையும் அவர் உம்மிடத்தில் வெளிப்படுத்தி கூறினதையும் கேட்டோம். நாங்கள் உம்முடைய கிருபையினாலும், வல்லமையினாலும் பாதுகாக்கப்படுகின்றோம் என்பதையே அது காண்பிக்கிறது. 24 கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் யாவரும் கவனமாகச் செவி கொடுப்போமாக. ஏனென்றால் இது எங்களைச் சரிசெய்யும்படியான பட்டியலெடுக்க வேண்டிய நேரமாயுள்ளது என்றும், ஆராய்ந்து சரிபார்க்கும் நேரமாயுள்ளது என்றுமே நாங்கள் விசுவாசிக்கிறோம். ஏனென்றால் எப்போது சோதித்தறிந்து வெளியே அனுப்பும் நேரம் இருக்கப் போகிறது என்பதை நாங்கள் அறியோம். அது நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாயிருக்கலாம். ஆகையால் நாங்கள் எங்களுடைய வழிகளையும், எங்களுடைய சிந்தனைகளையும் இன்றிரவு ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்போமாக. 25 நீர் வார்த்தையில் ஒரு சில நிமிடங்கள் எங்களிடத்தில் பேச வேண்டுமென்றும், அதன் பின்னர் நடைபெறவிருக்கும் இராபோஜன ஆராதனையில் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இந்தப் பிட்கப்பட்ட அப்பத்துண்டுகளையும், திராட்சைரசத்தையும் உட்கொள்ளும்போது, அது எங்களுடைய பாவ மன்னிப்பிற்காக நொறுங்குண்ட உம்முடைய சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையுமே சுட்டிக் காட்டுகிறது. 26 இன்றிரவு அதிகமாய் நேசிக்கப்படுகின்ற எங்களுடைய போதகர் சுகவீனமாயிருக்கிறார். ஆனால் அவர் எங்களுடைய தொலைபேசி உரையாடலில், அந்தச் சுகவீனத்தை பீடத்தின் மேல் வைத்திருக்கிறேன் என்றே கூறினார். கர்த்தாவே, நீர் அதை ஏற்றுக்கொள்வீர் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். நான் மேலும் அவருக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஏனென்றால் நாங்கள் அவரை நேசிக்கிறோம். எங்களுக்கு அவர் தேவை. அவருக்காகவும், அவருடைய குடும்பத்தினருக்காகவும், மற்றும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும், இன்றிரவு கூறப்பட்ட எல்லா வேண்டுகோள்களுக்காகவும், கூறப்படாமல் இருக்கின்ற வேண்டுகோள்களுக்காகவும் கூட நாங்கள் ஜெபிக்கிறோம். 27 மேலும் கூட்டங்களில் எங்களை ஆசீர்வதியும், ஏனென்றால் நாங்கள் இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 28 நான் இங்கு ஒரு சிறு வேதப்பகுதியை வாசிக்க விரும்புகிறேன். அதை இராஜாக்களின் முதலாம் புத்தகம் 19-ம் அதிகாரத்திலிருந்து கண்டெடுத்துள்ளேன். எனவே அதை 9-வது வசனத்திலிருந்து வாசிக்கிறேன். அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்; எலியாவே, இங்கு உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்: நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்து போனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமியதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 29 நான் ஒரு சில நிமிடங்களுக்காக ஒரு பாடப் பொருளை எடுக்க விரும்புகிறேன்; அது, இங்கே உனக்கு என்னக் காரியம்? என்பதாகும். 30 எலியா ஒரு கடினமான நாளை உடையவனாயிருந்தான். அவன் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்து வந்தான். அவன் கர்த்தருடைய மகிமை இறங்கி வந்ததைக் கண்டிருந்தான். அவன் வானத்திலிருந்து அக்கினி வர வேண்டுமென்று ஜெபித்திருந்தான். அதன் பின்னர் பூமியின் மேல் மழை பொழிய வேண்டுமென்று ஜெபித்திருந்தான். இந்த எல்லா சிரமத்தினூடாகவும் இருந்த காரணத்தால் அவனுடைய நிலையானது கிட்டத்தட்ட பொறுமையையிழக்கும் உணர்வை கொண்டவனாயிருந்தான். ஓ, என்னால் அவனுக்காக எவ்வாறு உள்ளுணர்வு கொள்ள முடிகிறது. 31 முதலாவது அவன் இங்கே ஒரு பின்வாங்கிப்போன தேச ஜனங்களுக்காக பிரசங்கிப்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் ஒரு யேசபேல் என்பவளோ தன்னுடைய வழியிலேயே இருக்க விரும்பினாள். ஜனங்களோ தேவனை மறந்திருந்த நிலைக்கு, அவருடைய எல்லா வாக்குத்தத்தங்களையும், அவருடைய எல்லா கட்டளைகளையும் மறந்திருந்த நிலைக்கு, அவருடைய பிரமாணங்களைக் காத்து நடவாத நிலைக்கு, அவருக்காகக் கவலையேப்படாத ஒரு நிலைக்கு வந்து விட்டிருந்தனர். அவை எல்லாவற்றிற்கு மத்தியிலும் எலியா இருந்த போதிலும், அவனால் எதனோடும் ஒப்புரவாக முடியவில்லை. அவன் தன்னுடைய திட நம்பிக்கைகளின் பேரில் உண்மையாய் நிற்க வேண்டியதாயிற்று. ஓ, அது எவ்வாறு இந்நாளை பிரதிபலிக்கிறது. 32 அவர்களுக்கு யேசபேல் என்னும் பெயர்கொண்ட ஒரு இராணி இருந்தாள். அவள் இஸ்ரவேலின் பிள்ளைகள் எல்லோரையும், தன்னுடைய நவீன விசித்திரமான வாழ்க்கையினால் வழி தவறிப் போகும்படி வழி நடத்தியிருந்தாள். அவர்கள் வேசித்தனம்பண்ணவும், பொல்லாத காரியங்களைச் செய்யவும் அவள் தூண்டினாள். அது அப்படியே இன்றைக்கு ஒரு நல்ல இணைவான பொருத்தமாயிருக்கிறதல்லவா? 33 ஆனால் எலியா இவை எல்லாவற்றிற்கு மத்தியிலும்…இருந்தான், அதே சமயத்தில் அநேக இஸ்ரவேல் புத்திரர்கள், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒப்புரவாகி, நவீன போக்குக் கொண்ட வாழ்க்கையையே வாழ விரும்பினர். அதே சமயத்தில் எலியாவோ அதனோடு ஒப்புரவாக மனதில்லாதிருந்தான். அவன் யேசபேலுக்கு அவளுடைய ஸ்தானத்தையும், அவள் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினான். ஓ, அவளோ, அந்தத் தீர்க்கதரிசியை வெறுத்தாள். ஆனால் அவள் சற்றேனும் மாற்றமின்றி வாழ்ந்து கொண்டு, அதே சமயத்தில் அவன் தன்னுடைய போதகர் என்று உரிமைகோர மனதில்லாதிருந்தபோதிலும், அவன் அவளுடைய போதகராகவே இருந்தான். 34 ஓ, அநேக சமயங்களில் அவர்கள் அதைக் கூறும்படி உரிமைக் கொண்டாடுகிறதில்லை. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு தேவனால் அனுப்பப்பட்டிருக்கிற ஒரு மனிதன் முழு சமுதாயத்திற்குமே ஒரு போதகனாக இருக்கிறான். அவன் ஒரு பாப்டிஸ்டாயிருந்தாலும், பிரஸ்பிடேரியனாயிருந்தாலும், அல்லது அவன் யாராயிருந்தாலும் அவனுக்கு இவனே போதகனாவான். தேவன் தன்னுடைய மனிதனை அபிஷேகிக்கிறார், எனவே அவன் ஒப்புரவாகமாட்டான். ஆனால் ஜனங்களோ சில நேரங்களில் அவனை வெறுக்கிறார்கள். ஏனென்றால் அவன் சத்தியத்திற்காக நிற்கிறான். ஆனால் அதே சமயத்தில் அவன் அந்த வேளைக்கான தேவனுடைய போதகனாயிருக்கிறான். 35 ஓ, அவள் அவனை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்லக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்ய மனதுள்ளவளாயிருந்தாள். ஆனால் அதே சமயத்தில் அவன் தேவனுடைய அடிப்படை தத்துவங்களுக்கும், தேவனுடைய நியமங்களுக்கும் உண்மையாயிருந்தான். அவளுடைய நவநாகரீக குழுக்களும், சமுதாய நடவடிக்கைகளும் அவளுடைய முகத்தின் வண்ணம் பூசுதலும், உடுத்தியிருந்த அவளுடைய ஆடைகளும் அந்தத் தேசத்தை மாசுபடுத்தியிருந்தது. ஆனால் வயோதிக எலியாவோ எளிதாய் விட்டுக் கொடாதவனாயிருந்தான். அவள் என்ன நிலைமையில் இருந்து கொண்டிருந்தாள் என்பதை அவன் அவளுக்குக் கூறினான். 36 தேவனே, பாவத்தோடு ஒப்புரவாகாத எலியாக்களை இன்னும் அதிகமாய் எங்களுக்கு அனுப்பும். அது எவ்வளவு மோசமாக தீங்கிழைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் சத்தியத்தைப் பிரசங்கிக்கும் யாரையாவது எங்களுக்கு அனுப்பும். உலகத்தின் காரியங்களோடு ஒப்புரவாகாத ஊழியக்காரர்களைத் தேவன் இன்னமும் ஒவ்வொரு சமுதாயத்திலும் உடையவராயிருக்கிறார். 37 எலியா நவீன போக்குண்ட காரியங்களை விரும்பவில்லை. ஆகையால் அவன் தேவனுக்கு உண்மையாய் நின்றான். அப்பொழுது பலபரீட்சை உண்டானது. பலபரீட்சையானது மீண்டும் வந்துள்ளது. 38 எலியா கர்மேல் பர்வதத்தின் மேலிருந்தான். அற்புதங்களின் நாட்கள் எல்லாம் கடந்து போய்விட்டன, அற்புதங்கள் என்பவைகளைப் போன்ற எந்தக் காரியமும் இருக்கவே முடியாது என்று அவர்கள் எண்ணியிருந்தபோது, அதில் விசுவாசங்கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். அப்பொழுது அவன், “உங்களுடைய எல்லாத் தீர்க்கதரிசிகளையும் இங்கே மேலே அழைத்து வாருங்கள். அவர்களை இங்கே பர்வதத்தின் மேல் அழைத்து வாருங்கள். அப்போது தேவன் யார் என்று பார்க்கும்படி நாம் நிரூபிப்போம்” என்றான். நான் அந்த வேத வாக்கியத்தை விரும்புகிறேன். 39 ஓ, இன்றைக்கு எப்போதாவது ஒரு நேரத்தில், ஒரு இடத்தில் அந்த உண்மையான தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தால் நலமாயிருக்கும். தேவன் என்னவாயிருக்கிறார் என்பதை நாம் நிரூபிப்போம். 40 கல்வியே விடுதலைக்கான வழியாயிருக்குமேயானால், அப்பொழுது ஏன் அது செயல்படுகிறதில்லை? சமுதாய புகழ்ச்சிகள் போன்றவை வழியாயிருக்குமானால், அப்பொழுது ஏன் அது செயல்படுகிறதில்லை? நம்முடைய நண்பர்களாயிருக்கும் மற்ற தேசங்களுக்கு கடன் வழங்குவோமேயானால்…அவர்கள் காரியம் முடிந்தவுடனே, நமக்கு எதிரே அவர்களுடைய குதிங்காலை தூக்குகிறார்கள். நீங்கள் பணத்தினால் நட்பை வாங்க முடியாது. நட்பு ஒரு தேவனுடைய வரமாயிருக்கிறது. மகத்தான சபைகளும், மகத்தான போதகர்களுமே, அதற்கான வழியாயிருப்பாகளேயானால், நாம் ஏன் இன்னும் நம்முடைய சமுதாயங்களில் தேவனை அதிகமாய் அறியாதவர்களாக இருக்கிறோம்? அப்படியானால் நாம் ஏன் இன்னும் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம்? கல்வித் திட்டமும், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட பிரசங்கபீடமும், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடற்குழுவும் அதற்கான வழியாயிருக்குமேயானால், அப்பொழுது நாம் ஏன் எல்லா நேரத்திலும் தொடர்ந்து தேவனை விட்டு தூரமாய் விலகிச் செல்கிறோம். அப்படியானால் அது கிரியை செய்யவில்லையே. 41 விஞ்ஞானம் என்ன செய்துள்ளது? விஞ்ஞானம், நீங்கள், “நேரம் வரும், அப்பொழுது விஞ்ஞானத்தால் இதைச் செய்ய முடியும், அதைச் செய்ய முடியும்” என்று கூறலாம். அவர்கள் என்ன செய்துள்ளனர்? அவர்கள் முழு உலகத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு நிலைக்கே நம்மை கொண்டு வந்திருக்கின்றனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் உலகை மேம்பட்டதாக்குவதற்குப் பதிலாக பாழாகிக்கொண்டிருக்கிறார்கள். 42 அண்மையில் ஐக்கிய நாடுகளின் இளைஞர் பிரிவுகளுக்கான அரசியல் துறையரங்கத் துப்பறியும் காவல்துறை இலாகாவின் (FBI) தலைவரான ஆல்ஃபெரார் (A1 Ferrar) என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். நான் அவரை கிறிஸ்துவண்டை வழிநடத்தியிருந்த பிறகு, ஒரு நாள் நாங்கள் அங்கே துப்பாக்கிச்சுடும் பயிற்சியைப் பழகும் அரங்கத்தில் இருந்தோம். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே. நான் ஒரு பாப்டிஸ்டு. நீங்களும் ஒரு பாப்டிஸ்டாக இருந்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன்” என்றார். அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன். 43 அப்பொழுது அவர், “ஆனால் நீர் பேசிக்கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியை நான் இன்னும் பெற்றுக்கொள்ளவேயில்லை” என்றார். மேலும் அவர், “அது எனக்காகவும் இருக்கும் என்று நீர் நினைக்கிறீரா?” என்று கேட்டார். அப்பொழுது நான். “ஆம் ஐயா” என்றேன். 44 அதற்கு அவர், “ஏதாவது ஓர் அருமையான உணவக விடுதியில் ஓர் அருமையான அறையை ஏற்பாடு செய்கிறேன். அதன் பின்னர் நீங்களும் நானும் அங்கு செல்வோம். அப்பொழுது அவர் ஒருக்கால் அந்த உணவக விடுதிக்கு வந்து, என்னை அவருடைய ஆவியினால் நிரப்புவார்” என்றார். அதற்கு நான், “உமக்கு ஒரு உணவக விடுதி அறை வேண்டியதில்லை” என்றேன். அப்பொழுது அவரோ, “அப்படியானால் அவர் என்னை எங்கே சந்திப்பார்?” என்று கேட்டார். அதற்கு நான், “இங்கேயே சந்திப்பார்” என்றேன். 45 அப்பொழுது அவர், “அவர் இந்த்ப் பயிற்சி அரங்கத்திற்குள் வரமாட்டார். அவர் இங்கே இந்தத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அரங்கத்திற்குள் வருவாரா?” என்று கேட்டார். 46 அதற்கு நான் “அவர் ஒருவருக்காக ஒரு மீனின் வயிற்றிற்குள் சென்றார். மற்றொருவருக்காக அவர் எரிகிற அக்கினி சூளைக்குள்ளாகச் சென்றார். எனவே நீர் அவரைச் சந்திக்கும் எந்த இடத்திலும் அவர் உங்களைச் சந்திப்பார்” என்றேன். நிச்சயமாக. தேவன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். அவர் உங்களோடு அதைக் குறித்து பேச விரும்புகிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே அவர் வருவார். 47 இப்பொழுது, யேசபேல் தேசத்தை மாசுபடுத்தியிருந்தாள். எலியா ஒரு சிரமத்தின் பேரிலான உணர்ச்சி துடிப்புடையவனாயிருந்து வந்தான். தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்று நிரூபிக்கும்படி அவன் பர்வதத்தின் மேல் மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும் நிகழ்த்தியிருந்தான். ஆனால் அவனால் ஒரு அற்புதத்தின் மூலமாகவே அதற்கு பதிலளிக்க முடிந்தது. அது என்ன ஒரு விளைவைக் கொண்டு வந்தது? அவனுடைய சொந்த ஜீவனுக்காக ஒரு பயமுறுத்துதலையே. அது ஒரு உலகளாவிய எழுப்புதலுக்குப் பதிலாக என்னத்தைக் கொண்டு வந்தது? அது அவனுடைய ஜீவனுக்கு ஒரு பயமுறுத்துதலையே கொண்டுவந்தது. 48 யேசபேல், ஆகாப் இந்த காரியங்களை அவளிடத்தில் கூறினபோது, அவள், “நான் நாளை இந்நேரத்தில் அவனுடைய தலையை துண்டிக்காமற்போனால், தேவர்கள் அதற்காகச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள்” என்றாள். 49 தேவனை தன்னுடைய இருதயத்திற்குள் கொண்டிருந்த எலியா, தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்று ஜனங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். எனவே இதுவோ அவனை உணர்ச்சிபொங்க திடுக்கிடச் செய்திருந்தது. ஆகையால் அவன் அதை கேட்டபோது, அவன் வனாந்திரத்திற்குள்ளாக ஓடினான். அப்பொழுது, அவன் அங்கே ஆறுதலைக் கண்டடைய முயற்சித்து, ஒரு சூரைச் செடியின் கீழ் படுத்துக் கொண்டான். அவர் தம்முடைய ஊழியக்காரனை தூரமாய் அனுப்பியிருந்தார். அவர் அவனை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டார். 50 இப்பொழுது நம்முடைய சம்பவப்பகுதி மூன்று வித்தியாசமான ஸ்தலங்களுக்குள்ளாகச் செல்கிறது. ஒன்று, கர்மேல் பர்வதம்; அடுத்தது, சூரைச் செடியின் கீழே; மூன்றாவது ஸ்தலம், தேவன் அவனை சந்திக்கிறார். அவன் ஒரு குகையில் இருக்கிறான். 51 இது மிகவும் வினோதமாயுள்ளது. இங்குள்ள போதகரும் மற்ற ஊழியக்காரர்களும், இதை அறிந்திருக்கிறார்கள். கவனியுங்கள், உங்களுடைய கர்மேல் பர்வதங்களுக்குப் பிறகு, நீங்கள் ஒரு சூரைச்செடியின் கீழ் இருக்கப்போகிறீர்கள். ஒரு மனிதன் எப்போதாவது ஒரு ஆசீர்வாதத்தை உடையவனாயிருக்கும்போது, தேவனுடைய வல்லமை ஊற்றப்படுகிறபோது, அது அவனுக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறது. பாருங்கள், அப்பொழுது சாத்தான் பாதையில் இருக்கிறான். நினைவிருக்கட்டும், ஞாயிற்றுக் கிழமையான ஒரு நல்ல நாளுக்குப் பிறகு, அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை, அது ஒரு கடினமாக காரியமாயிருக்கப் போவதாயிருக்கும், ஏனென்றால் அதற்கு முந்தின நாள் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக மனதில் பதிய வைத்ததை அதிலிருந்து உங்களுடைய அந்த நம்பிக்கையை இடித்துத் தள்ளக்கூடிய ஒவ்வொரு காரியத்தையும் அவன் செய்யப் போகிறான். ஆகையால், எலியா ஒரு மிகக் கடுமையான நாளை உடையவனாயிருந்தான். ஆனால் எப்படியிருந்தபோதிலும், அவன் பதட்டமான நிலையையே உடையவனாயிருந்தான். 52 எல்லா தீர்க்கதரிசிகளுமே…பித்து பிடித்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தனர். இயேசு கிறிஸ்து பித்து பிடித்தவர் என்று அறிவிக்கப்பட்டார். ஒவ்வொரு அப்போஸ்தலர்களுமே க்கதரிசிகளும் பொது ஜனங்களால் பித்து பிடித்தவர்கள் என்றே அறிவிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களுடைய ஊழியமானது அவர்கள் தங்களுடைய சிந்தனையை இழந்துவிட்டனர் என்று ஜனங்கள் எண்ணிக் கொள்ளுமளவிற்கு மிகவும் இயற்கைக்கு மேம்பட்டதாயிருந்தது. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். அப்பொழுது நீங்கள் ஒரு வித்தியாசமான நபராய் மாறுகிறீர்கள். 53 சகோதரன் பீலர் பின்னால் உள்ள தன்னுடைய அடையாளத்தைக் குறித்துக் கூறினதுபோல, நீங்கள் மீண்டும் பிறக்கின்றீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். பழையக் காரியங்கள் ஒழிந்து போயின. நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கும்போது, உலகத்தின் மாம்சபிரகாரமான காரியங்கள் உங்களை இன்னும் பற்றிப் பிடித்திருக்கவில்லை. நீங்களும் அவைகளை இன்னும் பற்றிப் பிடித்திருக்கவில்லை. 54 தேவன் ஒரு மனிதனை பற்றிப் பிடிக்கிறபோது, ஒரு சபையில் அவர் செய்கிற முதலாவது காரியம் அதை உலகப்பிரகாரமானதிலிருந்து பரிசுத்தத்திற்கு கொண்டு வருகிறார். அவர் அதை மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக கொண்டு வருகிறார். அது மீண்டும் பிறந்துள்ளது. அது புதியதாய் உள்ளது. அதனுடைய எண்ணங்கள் புதியதாயிருக்கின்றன. இன்றைக்கு அதைப்போன்ற ஒரு எழுப்புதலே நமக்குத் தேவை. மெய்யாகவே உண்மையாய் உள்ளது. ஓ, நாம் ஆவியின் அபிஷேக முழுகுதலை உடையவர்களாயிருந்து வந்தோம். நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய கிளர்ச்சிகளையும் உடையவர்களாயிருந்தோம். ஆனால் நமக்கு இனி அது தேவையில்லை. ஜனங்களுடைய இருதயங்களில் ஜீவிக்கிற தேவனுடைய ஒரு ஆவியின் எழுப்புதலே நமக்குத் தேவை. நமக்கு அதிகமான ஆவியின் அபிஷேக முழுகுதலோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமான கிளிர்ச்சியூட்டுதலோ விழுதலோ தேவையில்லை. நமக்கு ஒரு எழுப்புதலே தேவை. அதுவே நாம் பெற்றுள்ளதை உயிர்ப்பிக்கக் கூடியதாயிருக்கிறது. ஒரு ஆவிக்குரிய பிரகாரமான கிளர்ச்சியூட்டுதல் அல்ல, சில சமயங்களில் அது பலதரப்பட்ட ஜனங்களைக் கொண்டு வரக் காரணமாக அமைகிறது. ஆனால் நமக்கோ சலித்துப் பிரித்து, புடைத்தெடுக்கும் ஒரு எழுப்புதலே தேவை. அதுவே எல்லாக் காரியங்களையும் பிரித்து அகற்றிவிடும். 55 கடற்கரை அருகே நின்று பார்ப்பது போன்றுள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு நான் பியூரிட்டோ ரிக்கோ என்ற இடத்தில் உள்ள சில சகோதரர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அதாவது நான் அந்தப் பெரிய சமுத்திரத்தைக் கண்டபோது, ஒரு பெரிய புயலின்போது அலைகளோ இந்தக் கூடாரத்தைப் பார்க்கிலும் உயரமாயிருந்தன. அப்பொழுது நான், “அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது அமைதியாயிருந்தபோது பெற்றிருந்த தண்ணீரைக் காட்டிலும் ஒரு துளித் தண்ணீரைக் கூட கூடுதலாக பெற்றிருக்கவில்லை. ஆனால் அந்த கொந்தளிப்பையும், குதித்தலையும் செய்கிறது எது? அது எதைப் பொருட்படுத்துகிறது? அது அதிலுள்ள எல்லா குப்பைகளையும் கரையின் மேல் எரிகிறது” என்றேன். 56 அதுதான் சபைக்குத் தேவைப்படுகிறது. அதாவது சபையினுடைய விசுவாசிகளின் இருதயத்தில் தன்னடக்கத்தையும், தேவனுடைய பரிசுத்தத்தையும், தூய்மையையும் திரும்பக் கொண்டு வந்து, உலகத்தின் காரியங்களையும், உலகப்பிரகாரமான எல்லாவற்றையும் அதிலிருந்து அசைக்கும் ஒரு எழுப்புதலே தேவையாயிருக்கிறது. 57 ஏன்? புருஷர்கள் தங்களை தாங்களே தகுதிபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எப்பொழுதாவது ஒரு தடவைக் கூட தங்களுடைய ஆவியில் எழுப்புதல் அடைகிறதில்லை. எனவே அவர்கள் போலியாக தங்களுக்குத் தாங்களே பட்டப்பெயரை சூட்டிக்கொண்டு, வெற்றாச் சாரமுறையை உடையவர்களாய், ஒழுக்க வீறாப்பு கொண்டவர்களாகுமளவிற்கு அவர்கள் மிகவும் மாம்சப்பிரகாரமாகவும், மிகவும் கவலையற்றவர்களாகவும் மாறுகின்றனர். அவர்கள் படிக்கிறார்கள், ஆராய்கிறார்கள், அது நல்லதுதான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது அதைக் குறித்தல்லவே. நீங்கள் வார்த்தையைக் குறித்து அதிகமாய் அறிந்திருக்கிறீர்கள். வார்த்தையை அறிந்து கொள்வது நல்லதுதான். ஆனாலும் வார்த்தையின் ஆக்கியோனை அறிந்திருப்பதே மேலானதாகும். புரிகின்றதா? நீங்கள் விட்டுவிடுகிற அந்த சிறிய ஏதோ ஒரு காரியமே, நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய இருதயத்தில் உருவாக்குகிற ஏதோ ஒரு காரியமே, அதுவே முக்கியமான காரியமாகும். 58 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எலிசா தன்னுடைய பதற்றத்தின் படபடப்பில் இருந்தான். நான் எப்பொழுதும் அவனுக்காக வருத்தப்பட்டுள்ளேன். அவனுடைய பதற்ற நிலையில் ஏறக்குறைய மடிந்துபோகும் நிலையில் இருந்தான். யேசபேலிடமிருந்து வந்த அந்தப் பெரிய இடிபோன்றச் செய்தியானது மடிந்து போகுமளவிற்கு தாக்கியிருந்தது. ஆகையால் அவன் ஓடி, வனாந்திரத்திற்குள்ளாகச் சென்று, அந்தச் சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டான். 59 ஓ, அது சூரைச்செடியின் அனுபவமாயிற்றே! நம்மில் அநேகர் நம்மை சூரைச்செடியின் கீழ் கண்டறிகிறோம். நான் அங்கே என்னைக் கண்டறிகிறேன். அநேக சமயங்களில் நீங்கள் என்னச் செய்ய வேண்டும் என்று தெரியாத ஒரு இடத்திற்கு வருகிறீர்கள். நீங்கள் குழப்பமடைந்துள்ளீர்கள். வெளிப்படையாகக் கூறினால், இப்பொழுது நான் சரியாக அதன் கீழ் இருந்து, “ஓ தேவனே, நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்?” என்று கூறி யோசித்துக் கொண்டிருக்கிறேன். 60 எலியாவைப் போல சூரைச்செடியின் கீழ் இருக்கிற ஜனங்களை நீங்கள் அறீவீர்கள். அவர்கள் உறங்க விரும்புகின்றனர். நான் உலகில் உள்ள எவரைப் பார்க்கிலும் அதிகம் களைப்புற்றிருக்கிற ஜனங்களுக்கே பிரசங்கிக்கிறேன். ஜனங்கள் மிகவும் களைப்படைந்துள்ளனர். அவர்கள்—அவர்கள் எங்குமுள்ள பைத்தியக்கார விடுதிகளையும், மருத்துவமனைகளையும் நிரப்பிக் கொண்டிருக்குமளவிற்கு அவ்வளவு மனசம்மந்தமான சிரமமடைந்துள்ளனர். அவர்கள் எதை விசுவாசிப்பது என்றும், அவர்களுக்கு என்ன தேவை என்றும் அறியாத அளவிற்கு அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மனதளர்வுற்ற பதட்ட நிலைக்குள்ளாக சென்று விட்டனர். அவர்கள் அங்கேயே படுத்துக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஓ, அது அப்பேற்பட்ட ஒரு சோகக்காட்சியாய் உள்ளது. 61 என் சகோதரனே, இங்கே கவனி. அதைப்போக்க உன்னால் மது அருந்த முடியாது. அதைப் போக்க உன்னால் சத்தமிட முடியாது. அதனை மட்டுப்படுத்துமளவிற்கு உன்னால் ஒரு போதும் சீட்டு விளையாட முடியாது. நீ அதை உறக்கத்தில் போக்க முயற்சித்து ஆயிரம் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனாலும் உன்னால் அதைச் செய்ய முடியாது. நம்முடைய எல்லாச் சிறு பரிகாரங்களுமே நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகின்றன. ஆனால் நாம் அந்த நோய்க்கான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால்…உலகத்தில் உள்ள எல்லா மனநோய் வைத்தியர்களாலும் கூட அதனைக் குணப்படுத்த முடியாது. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்.—ஆசி.] அது நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது. சுகமோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் உள்ளது. கடற்கரையில் ஓய்வெடுப்பதினால் அல்ல. கீதத்தைக் கேட்க செல்வதினால் அல்ல. கீதங்களைப் பாடும் ஒரு பாடற்குழுவினால் அல்ல. அதைத்தான் நாம் இன்றைக்குச் செய்ய முயற்சிக்கிறோம். அதனைப் பாடிப் போக்கிட முயற்சிக்கிறோம். 62 “ஓ, நாம் நம்மை ஜோன்ஸைப் போன்றாக்கிக் கொள்வோம்.” நாம்—நாம் வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அதைப் போக்க கல்வி பயில முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதைச் செய்வதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. அது உண்மைகளை நோக்குவதாகும். அது உண்மை. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை இரண்டு முறை தட்டுகிறார்.—ஆசி.] ஓ, நீங்கள் நிலைகுலைந்து, குழப்பமடைந்திருந்தால், சபையில் சேர்ந்து கொள்ளாதீர்கள். கிறிஸ்துவண்டை வாருங்கள். அது மாத்திரமே பரிகாரமாகும். வேறெதிலும் ஈடுபட வேண்டாம். வேறெதையும் புதிதாகத் துவங்க வேண்டாம். அப்படியே புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவே பதிலாயிருக்கிறார். 63 அவன் அங்கே சூரைச் செடியின் கீழ் படுத்திருந்தான். அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை. அவனுடைய பதட்டநிலை நிலைகுலைக்கப்பட்டிருந்தது. அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை. எனவே அவன் ஒரு பயங்கரமான நிலையில் இருந்தான். 64 நம்மில் அநேகர் விசேஷமாக ஒரு கர்மேல் பர்வத அனுபவத்திற்குப் பிறகு அந்த ஸ்தானங்களை அடைந்துள்ளோம். அன்றொருநாள் அதைக் குறித்து யாரோ ஒருவரால் என்னிடம் கேட்கப்பட்டது. அது எப்படி…என்னவாயிருக்கும்…என்ன செய்யப்பட முடியும்? அந்த நேரத்தில் நமக்காக என்ன செய்யப்பட முடியும்? செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் தான் உண்டு. அது உங்களையே தேவனிடத்தில் ஒப்புக்கொடுப்பதாகும். இப்பொழுது ஒரு மனிதனால் அதிகமாக வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அதே சமயத்தில் ஒரு மனிதனால் தன்னை குறைவான வேலையிலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். 65 இந்த மனிதனுக்கு உணவு தேவை என்பதைத் தேவன் அறிந்திருந்தார். எனவே அவனுக்குப் புசிக்க ஏதோ ஒன்று தேவைப்பட்டது. இங்குள்ள இந்த இடத்திலே கீழே அவன் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்காக ஏதோ ஒரு காரியத்தைத் தேவன் செய்ய வேண்டியதாயிருந்தது. 66 சூரைச் செடியின் கீழ் வருகிற ஒவ்வொரு மனிதனுக்காகவும், தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டியவராயிருக்கிறார். இல்லையென்றால் அவன் சின்னாபின்னமாகிவிடுவான். அவருடைய ஊழியக்காரன் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல், அங்கு அந்தச் செடியின் கீழ் படுத்துக் கொண்டிருப்பானேயானால், அப்பொழுது அவர் அதைச் செய்ய வேண்டியவராயிருக்கிறார். அவர் தன்னுடைய கட்டளையை நிறைவேற்றியுள்ளார். எலியாவோ, “ஓ, கர்த்தாவே, நான் மரிக்கட்டும்” என்றான். 67 நான் பிரசங்கித்து, மன்றாடி, சம்மதிக்கச் செய்து, பின்னர் தேவதூதன் கூட்டத்தினுடாக அசைவாடி, அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்கிறதைக் கண்டு, மிகவும் களைப்புற்றவனாய்க் காணப்பட்டு, கூட்டத்தை விட்டு வெளியே வந்த பிறகு நானும் அதுபோன்ற அந்த உணர்வுகளை உடையவனாயிருந்திருக்கிறேன். அப்பொழுது நான் வெளியே வந்து ஒரு காரில் அமர்ந்திருக்கும்போது, அவர்களோ, “அது மனோதத்துவ சாஸ்திரமேயல்லாமல் வேறொன்றுமில்லை. அது ஒன்றுமே இல்லை. அதற்கு ஒன்றுமே கிடையாது. அவையாவும் அர்த்தமற்றவை” என்று கூறுவதைக் கேட்டு அழுவேன். 68 ஓ, அப்பொழுது நான் அந்த சூரைச் செடியின் கீழ் ஊர்ந்து செல்கிறேன். பின்னர் நான், “கர்த்தாவே, நீர் ஏன் என்னை அதைச் செய்யும்படி அனுமதித்தீர்? என்ன செய்யபட முடியும்?” என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஆனால் நாம் யாவரும் அந்த அனுபவங்களை அடைந்துள்ளோம். ஆனால் அவருடைய ஊழியக்காரனுக்கோ யேகோவாவின் இரக்கம் உண்டே! உங்களுடைய சோதனைகளைத் தேவன் அறிந்திருக்கிறார். இதைச் சற்று அறிந்துகொள்ளுங்கள். அவர் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆகையால் அவர் இறங்கி வருகிறார். 69 அவர் தம்முடைய ஊழியக்காரனுக்கு கொஞ்சம் இளைப்பாறூதல் தேவைப்படுகிறது என்பதை அறிந்திருக்கிறார். ஆகையால் அவர் சற்று நேரம் அவனை உறங்க வைக்கிறார். அவன் அங்கே படுத்துக் கொண்டிருக்கையில், அவன் பலமடைய காத்துக்கொண்டிருந்தார். இல்லையென்றால், அவன் மரிக்கும்படி ஜெபித்துக்கொண்டிருப்பான். “கர்த்தாவே, என் பிதாக்கள் எனக்கு முன்னே மரித்து போயினர். எனவே இப்பொழுது என் ஜீவனையும் எடுத்துக்கொள்ளும். நான் போதுமானவற்றை செய்துவிட்டேன். நான் ஒரு நல்ல போராட்டத்தைப் போராடினேன். நான் ஓட்டத்தை முடித்தேன்.” ஆனால் அங்கோ இன்னும் செய்யப்பட வேண்டிய வேலை இருந்தது. தேவன் தம்முடையத் தீர்க்கதரிசியோடு வேலையை முடித்துவிடவில்லை. ஆனால் அவருக்கு இன்னமும் வேலை இருந்தது. 70 நாம் எவ்வளவுதான் கதறினாலும், இதையும், அதையும் அல்லது மற்றதையும் சிந்தித்தாலும் கவலையில்லை. தேவன் நம்மோடு காரியத்தை நிறைவேற்றி முடிக்கும் வரையில் ஒன்றுமே நம்மை எடுத்துக் கொள்ள முடியாது. நான் அதைக் குறித்து அறிந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 71 நான் ஒருமுறை செய்தது போல், நீங்களும் சில சமயங்களில் அதைப்போன்று செய்ய உணரலாம். அதாவது நான் ஒரு கைத்துப்பாக்கியை என் தலைக்கு எதிரே வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. பின்னர் நான் பணிபுரிந்து கொண்டிருந்த மின்சாரக் கம்பியில் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் உயரிய மின்வலியளவில் பாதுகாப்பு கையுறைகளைக் கழற்றி விட்டு, அந்த மின்சாரக் கம்பியில் கரத்தை வைக்க முயன்றேன். ஆனாலும் என்னால் அதைச் செய்ய முடியாமற் போயிற்றே! ஏதோ ஒன்று அப்படியே பற்றிப் பிடித்துக்கொண்டது. அது எலியாவோடிருந்த அதே தேவன், இன்றைக்கும் அவர் அதே மாறாத தேவனாயிருக்கிறாரே! அவர் என்னை அந்தச் சூரைச்செடியின் கீழ் கண்டார். என்னுடைய மனைவியும், குழந்தையும், என்னுடைய தந்தையும், என்னுடைய சகோதரனும் மற்றுமுள்ள யாவரும் அதோ அங்கே அந்தக் கல்லறையில் கிடந்தனர். நான் ஏறக்குறைய நிலை குலைந்துப் போனவனாயிருந்தேன். அப்பொழுது நான் அந்தச் சூரைச்செடியின்கீழ் படுத்திருந்தேன். அது கடினமாயிருந்தது. எனக்கு ஓர் நிலைமை ஏற்பட்டது. நான் என்னையே மறந்து அவ்வளவாய் உணர்விழந்தவனாயிருந்தேன். நான் ஒரு துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டு என்னுடைய மூளையை சிதறப்பண்ண முயற்சித்தேன். ஆனால் அதுவோ வெடிக்கவில்லை. பார்த்தீர்களா? ஆனால் இன்னும் செய்யப்பட வேண்டிய வேலை இருந்தது. ஏதோ ஒரு காரியம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அப்பொழுது தேவன் தம்முடைய வேலையைச் செய்து முடித்திருக்கவில்லை. அவர் எப்பொழுதுமே உங்களைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வார். 72 பரிதாபமான, சோர்வுற்ற, களைத்துப்போன ஊழியக்காரனாயிற்றே! அவர் அவனைக் கண்டார். அவன் எங்கே இருந்தான் என்பதை அவர் அறிந்திருக்கிறார். 73 இன்றிரவு நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒரு சூரைச்செடியின்கீழ் இருக்கலாம். ஒருக்கால் எல்லாக்காரியமும் போய்விட்டிருக்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமக்கு முழுமையான மறு ஏற்பாடு தேவையில்லை. 74 அங்கே கீழே தென்பாகத்தில் உள்ள அந்த வயோதிக கறுப்புநிற பெண்மணி கூறினது போன்றே உள்ளது. அதாவது அவளுக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருந்தது. ஒரு கார் அவளை இடித்து விட்டிருந்தது. அது…அது அவளுக்கு மிகவும் மோசமான தீங்கிழைத்திருந்தது. எனவே வழக்கறிஞர், “நீர் அந்தச் சேதங்களுக்காக வழக்குத் தொடர விரும்புகிறீரா?” என்று கேட்டார். 75 அதற்கு அவளோ, “வழக்கறிஞரே, இரக்கம்! முடியாது. தேனே” என்று கூறிவிட்டாளாம். மேலும் அவள், “எனக்கு போதுமான சேதம் உண்டாயிருக்கிறது. எனவே நான் கொஞ்சம் பழுதுப் பார்க்கவே விரும்புகிறேன்” என்றே பதிலுரைத்தாளாம். 76 அவள் இந்தச் சமுதாயத்திற்காகவும், இன்றிரவு உள்ள இந்தச் சபைக்காகவும், நரகத்திற்குச் செல்ல ஆயத்தமாயுள்ள இந்த அமெரிக்காவுக்காகவும், அதை நன்றாகவே கூறினாள் என்றே நான் கருதுகிறேன். இது பின்வாங்கிப்போயிருக்கவில்லை. இது ஏற்கனவே இழக்கப்பட்டாயிற்று. இது நரகத்திற்கு செல்லும் அதனுடைய பாதையில் இல்லை—இல்லை; இது ஏற்கெனவே நரகத்தை சந்தித்து விட்டது, இது இழக்கப்படப்போவதில்லை. இது ஏற்கெனவே இழக்கப்பட்டாயிற்று. இது சேதங்களுக்காக வழக்குத் தொடர வேண்டியதில்லை. இதற்கு ஒரு பழுதுபார்ப்பே தேவைப்படுகிறது. இது உண்மையாயுள்ளது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் எங்கேப் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். 77 அவர் ஒரு தூதனை அனுப்பினார். அந்தத் தூதன் அவரைத் தொட்டான். அவன் உறங்கச் சென்றான். அவன் விழித்தெழுந்தபோதோ, அங்கே சில கோதுமை அடைகள் இல்லை. ஏதோ ஒரு விதமான அடைகள், தழலில் சுடப்பட்ட அடைகள் அவனுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தன. அப்பொழுது அவர், “எலியாவே, எழுந்து புசி” என்றார். அங்கே அவருடைய ஊழியக்காரனுக்கு தேவனுடையக் கிருபை இருந்தது. பாருங்கள். அவர் அவனை இளைப்பாறப்பண்ணிக் கொண்டிருந்தார். 78 இயேசு, “வனாந்திரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்றார் என்பதை நீங்கள் அறீவீர்கள். நீங்கள் ஓய்வெடுக்க வேண்டியதில்லையென்று இந்த நபர்களில் சிலர் நினைக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏறத்தாழ சீக்கிரத்தில் களைப்படைந்து விடுவார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்கள் ஓய்வெடுக்கவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் தங்களை எங்காவது பாழாக்கிக் கொள்வதை கண்டறிகின்றனர். இன்றிரவு நம்முடைய சகோதரன் பில்லி கிரஹாமும் அந்நிலையில்தான் உள்ளார் என்று நான் கருதுகிறேன், அவர் வரம்புமீறி செயலாற்றி காரியத்தைக் கெடுக்கவே முயற்சிக்கிறார். இந்த மானிட சரீரங்கள் பலமுள்ளவைகள்தான். ஆனாலும் அவைகளுக்கு இளைப்பாறுதல் தேவையே. 79 ஆகையால் நீங்கள் எங்காவது சென்று சற்று இளைப்பாற முடியும். ஆனால் அப்பொழுது அவர்களோ உங்களை, “அவர் ஒரு பிரசங்கியாயிருந்தார் என்று எண்ணினேன். அவரைப் பாருங்கள். அதோ அவர் கரையிலே மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று விமரிசனம் செய்வார்கள் அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு காரியமாயிருக்கும். ஆனால் காரியம் அதுவல்ல. யேகோவா தமக்குச் சொந்தமானவர்களைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வார். 80 அவன் அங்கே அந்தச் செடியின் கீழே படுத்துக் கொண்டிருந்தபோது, சோர்வுற்றுப்போய் நிலைகுலைந்திருந்தான். எனவே தேவன் அவனுடைய பதட்ட நிலையை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் அவனைப் போஷித்தார். பின்னர் அவர் அவனை மீண்டும் எழுப்பி, அவனை மீண்டும் போஷித்தார். அதன்பின்பு மீண்டும் உறங்க வைத்தார். 81 உங்களுக்குத் தெரியுமா? அந்த அடைகளில் என்ன இருந்தது என்று நான் அவ்வப்போது வியந்திருக்கிறேன். அவர் அந்த அடைகளில் எந்தவிதமான ஊட்டச்சத்தை வைத்திருந்தார்? எப்படியாயிருந்தாலும், அங்கே அதில் என்ன இருந்திருந்தாலும், அது நாற்பது பகல் மற்றும் நாற்பது இரவு வரை அவனை புசிக்காமல் நீடித்திருக்கச் செய்ததே. அவன் அந்த அடைகளில் இருந்து உண்டாயிருந்த பெலத்தினால்தான் சென்றான். 82 இன்றிரவு அவைகளில் சில எனக்குத் தேவை என்று தேவன் அறிந்திருக்கிறார். இந்தச் சபைக்கும் அவைகளில் சில தேவைப்படுகின்றது என்று நான் நிச்சயம் நம்புகிறேன். உலகத்திலிருந்து தூரமாய் பிரிந்து வாருங்கள். நாம் சற்று இளைப்பாறுவோம். நாம் அதைக் குறித்து சற்று நேரம் பேசுவோமாக. 83 உங்களுக்கு இளைப்பாற நேரம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஜான் வெஸ்லி அதை ஒரு முறை கூறினார். அப்பொழுது அவர், “நான் ஓய்வெடுக்க பயப்படுகிறேன். இளைப்பாற எனக்கு நேரமே இல்லை” என்றார். நீங்கள் இந்த இளைப்பாறுதல்களை பெற்றுக் கொள்ளவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் நிலைகுலைந்துக் காணப்படுவதைக் கண்டறிவீர்கள். 84 அதன் பின்னர் அவன் நாற்பது நாட்கள் இரவும் பகலும் நடந்து சென்றான் என்றும், தேவன் அவனை நிற்க வைக்கும்படி ஓர் இடத்தை கண்டுபிடித்து இல்லை ஒரு குகைக்குள்ளாக இழுத்துக் கொண்டார் என்பதையும் நாம் கண்டறிகிறோம். தேவன் அவனுடையக் கவனத்தைக் கவர விரும்பினார். ஆகையால் அங்கே ஒரு பலத்தக் காற்று உண்டாகிக் கடந்துப் போனது. அது பர்வதத்தைப் பிளந்தது. அது கன்மலைகளை அசைக்கத்தக்கதாக அவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது. ஆனால் தேவன் அந்தப் பலத்தக் காற்றில் இருக்கவில்லை. அது முன்னதாகச் செல்லும்படி தேவன் செய்தார். அதன்பின்னர் மீண்டும் பூமியை அசைத்த ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டானது. ஆனால், இன்னமும் தேவன் அந்த பூமியதிர்ச்சியிலும் இருக்கவில்லை. அதற்குப்பின் அக்கினி உண்டானது. ஆனால் தேவன் அக்கினியிலும் இருக்கவில்லை. அதன் பின்னர் அங்கே ஒரு அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. தேவன் அந்தச் சத்தத்தில் இருந்தார். 85 சகோதரனே, சகோதரியே, நான் ஒரு குகையிலே போதிய காலம் இருந்து வந்துள்ளேன். நீங்களும் கூட சுற்றிலும் சம்பவித்த ஏராளமான பூமியதிர்ச்சிகளின் அசைவுகளையும், குழப்பநிலைகளையும், ஏராளமான இரைச்சல்களையும் பகட்டாரவரங்களையும், அதைப் போன்றக் காரியங்களையும், பெரியக் கூட்டங்களையும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தேவன் எங்கே இருக்கிறார்? அதிலெல்லாம் அவர் இருந்து வருகிறாரா? அந்தக் காரணத்தினால்தான் நான் இந்தக் காலையில் என்ன செய்தேன் என்பதை நான் கூறினேன். ஒரு சுகமளிக்கும் ஆராதனையைக் காட்டிலும் ஆழமான ஏதோ ஒரு காரியம் வர வேண்டியதாயுள்ளது. அந்நிய பாஷைகளில் பேசும் ஒரு வரத்தைக் காட்டிலும் ஆழமான ஏதோ ஒரு காரியம் வர வேண்டியதாயுள்ளது. ஒரு பலத்த காற்றடிக்கிற முழக்கத்தை விட ஆழமான ஏதோ ஒரு காரியம் வரவேண்டியதாயுள்ளது. பலத்த காற்று புறப்பட்டுச் சென்றது. ஆனால் தேவன் அதில் இருக்கவில்லை. நாம் தேசம் முழுவதிலும் பலத்த காற்று அடிக்கிற முழக்கங்களையும். உணர்ச்சிவசப்படுதல்களையும், முகத்தில் மற்றும் கரங்களில் இரத்தம் வடிதல், இன்னும் எல்லாவிதமான அடையாளங்களையும் உடையவர்களாயிருந்து வந்துள்ளோம். ஆனால் தேவன் எங்கே இருக்கிறார்? 86 எலிசா காத்திருந்தான். அதே சமயத்தில் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஆனால் அவன் அதற்குச் செவிகொடுத்தான். அவன் அவர்களோடுள்ள எழுப்புதல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படி ஒருபோதும் செல்லவேயில்லை. அவன் ஒருபோதும் தேசத்தில் இருந்த மிகப்பெரிய கூடாரத்தில் சேர்ந்து கொள்ளும்படி ஒருபோதும் புறப்பட்டுச் செல்லவில்லை. அவன் ஒருபோதும் தொலைக்காட்சியின் பேரிலான நிகழ்ச்சிக்குச் செல்லவேயில்லை. அல்லது நாம் அழைக்கும் மற்றக் காரியங்களுக்கும் சென்றுவிடவில்லை. 87 இந்த மகத்தான எல்லா பகட்டாரவாரங்களிலும், அமெரிக்காவானது அந்த இரைச்சல்களுக்கு செவிகொடுக்கும் குற்றத்திற்குள்ளாகியுள்ளது. ஓ, நாம் இரைச்சலை விரும்புகிறோம். ஆனாலும் தேவன் அந்த இரைச்சலில் இல்லையே. அவைகள் கனமுள்ள காரியங்களாயிருந்தாலும் கூட, அதேசமயத்தில் தேவன் அந்த இரைச்சலில் இல்லையே. அப்படி இருந்திருக்குமேயானால், ஆப்பிரிக்கர்கள் முரசு கொட்டும்போது, நீங்கள் அப்படிப்பட்ட ஓர் இரைச்சலையும், தாளத்தையும் ஒருபோதும் கேட்டிருந்திருக்கவேமாட்டீர்களே! தேவன் அதில் இருக்கவில்லையே. நாம் பலத்த காற்று அடிக்கிற முழக்கங்களை உடையவர்களாயிருந்து வந்துள்ளோம். நாம் எல்லாவிதமான அக்கினிகளையும், பூமியதிர்ச்சிகளையும், குலுக்கல்களையும் மற்றும் பெரிய எழுப்புதல்களையும், அதைப் போன்றக் காரியங்களையும் உடையவர்களாயிருந்து வந்துள்ளோம். ஆனால் தேவன் அதில் இருக்கவில்லை. அதில் இருந்திருந்தால், அது தானாகவே உயர்ந்து காணப்பட்டிருக்குமே. 88 ஆனால், அதற்குப் பிறகு ஒரு அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டானது. அப்பொழுது அந்தச் சத்தத்தில் தேவன் இருந்தார். 89 நண்பர்களே, இன்றைக்கு நான் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஜனங்களாகிய நாம் எல்லா இரைச்சலினாலும் அவ்வளவாய் உணர்ச்சியூட்டப்பட்டு வசமிழக்கப்பட்டிருக்கிறோம். எனவே அமெரிக்கா இரைச்சலை விரும்புகிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நோக்கிப் பாருங்கள். அவர்கள் இந்தப் பண்டைய வானொலிப் பெட்டிகளில் தங்களால் முடிந்தளவு அதனுடைய சத்தத்தின் அளவை உயர்த்தி, சுழன்று ஆடும் நடனப்பாடல்கள் பூகி—யூகி மற்றும் எல்லாவிதமான பாடல்களையும் கேட்கிறார்கள். அவர்கள் அதை மிகவும் சத்தமாக வைத்துக் கேட்கிறார்கள். அது உங்களுடைய செவிப்பறையையே கிழித்துவிடும். கிட்டத்தட்ட நாள்முழுவதும் இரைச்சலே. 90 நாம் சபையில் முரசு கொட்டி, மேலும் கீழுமாக ஓடி, கூச்சலிட்டு, அலறி, கூக்குரலிட்டு, அந்தவிதமான ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்து வந்தோம். அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. ஆனால் தேவன் அதில் இருந்தாரா? அது என்ன செய்தது? அது நம்மை சிறு சிறு குழுக்களாக உடைத்துப் போட்டு, தேவனுடைய சபைகள் (assemblies of God,) தேவனுடைய சபை (Church of God), ஒருத்துவ ஐக்கிய பெந்தேகோஸ்தே (the Pentecostal united oneness) என்றும், இன்னும் மற்ற சிறு வித்தியாசமான ஸ்தாபனங்களாகவே அழைக்கப்படுகிறது. தேவன் அதில் இருக்கவில்லையே. அது தேவனுடைய ஒரு முன்னோடியாயிருந்தது. அது ஒரு வெளிச்சட்ட அமைப்புப் பணியாயுள்ளது. 91 இன்றைக்குக் கிறிஸ்துவமார்க்கம் என்று அழைக்கப்படுவதை நீங்கள் காணும்போது, ஜனங்கள் சபைகளுக்குச் சென்று, கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து, வெளியே போய் சுகமளித்தலை மறுதலித்து, தேவனுடைய வல்லமையை மறுதலித்து, ஒரு புனிதமாக்கப்பட்ட ஜீவியத்தை மறுதலித்து, உங்களையோ, “மதவெறியர்” என்று அழைப்பதை நினைத்துப் பாருங்கள். அது புறச்சட்ட அமைப்பாயிருக்கிறது. அது…சகோதரன் உட்ஸ் அவர்களே, நீங்கள் அதைக் கட்டிடம் கட்டுவதற்கு தற்காலிகமாக அமைக்கப்படும் தற்காலிகக் கட்டுமானம் என்றே அழைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு போலியானதாய் உள்ளது. அது வெளிப்புறத்தில் அமைக்கப்போகிற ஒரு புறச்சட்டமாய் உள்ளது. கட்டிடத்தைக் கட்டுவதற்கு தேவன் மாத்திரமே அதன் மேல் நிற்கிறார். தேவனுக்கு மகிமை! அது இடித்துப் போடப்படும் ஒரு போலியானப் புறச்சட்டமாய் மாத்திரமே உள்ளது. 92 நாம் கரங்களைத் தட்டி, “தேவனுக்கு மகிமை! நீங்கள் சத்தமிடும்போது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறியுள்ளோம். மெத்தோடிஸ்டுகள், நசரேயன்கள் அதைக் கூறினர். ஆனால் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர்களே கண்டறிந்தனர். 93 பெந்தேகோஸ்தேக்களோ, “நீங்கள் அன்னிய பாஷையில் பேசும் வரையில் உங்களுடைய கரங்களைத் தட்டி, சத்தமிடுங்கள். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள்” என்றனர். ஆனால் நாம் அதைப் பெற்றிருக்கவில்லையென்று நாம் கண்டறிகிறோம். 94 எந்த ஒரு காரியமும் விடப்பட்டிருக்கவில்லை. “தேவனே, நான் அதைக் கண்டறியக்கூடிய ஒரு குகைக்கு என்னைக் கொண்டு செல்லும்”. அப்பொழுது நாங்கள் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை கேட்போமாக. அது ஜீவியத்தில் உன்னதமான ஒரு நிலையினை உண்டாக்குகிறது. அந்த ஏதோ ஒருக்காரியம் என்னவென்றால், அதாவது, “நீங்கள் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அது உங்களுக்கு இராவிட்டால், நீங்கள் ஒன்றுமில்லை. உங்களால் தீர்க்கதரிசனம் உரைக்க முடிந்தாலும், அந்நிய பாஷைகளால் பேச முடிந்தாலும், அடையாளங்களையும், அதிசயங்களையும் காண்பிக்க முடிந்தாலும், அற்புதங்களை நடப்பித்து, மகத்தான அடையாளங்களை செய்ய முடிந்தாலும், ஆனால் அந்த அமர்ந்த மெல்லிய சத்தம் அங்கில்லையென்றால், நீங்கள் ஒன்றுமில்லை” என்றே வேதம் கூறுகிறது. அதைத்தான் இப்பொழுது நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 95 நாம் இடிமுழக்கங்களை உடையவர்களாயிருந்து வந்தோம். நாம் அக்கினியை உடையவர்களாயிருந்தோம். நாம் பலத்த காற்று அடிக்கிற முழக்கத்தையும், பூமியதிர்ச்சிகளையும் உடையவர்களாயிருந்து வந்தோம். ஆனால், “தேவனே எங்களுக்கு அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை அனுப்பும்”. அதுதான் நமக்குத் தேவை. சகோதரனே, கவனி. நமக்கு அந்த அமர்ந்த மெல்லியச் சத்தமே, பேசின அந்த அமர்ந்த ஒரு மெல்லியச் சத்தமே தேவை. 96 இயேசு. வேதம், “நீங்கள் அவருடைய சத்தத்தை வீதியில் கேட்க முடியாது. நீங்கள் அவருடைய அழுகையைக் கேட்கவில்லை” என்று கூறியுள்ளது. அவர் நம்முடைய மாதிரியாயிருந்தார். அவரை நோக்கிப் பாருங்கள். அவர் தம்முடைய ஆவியில் ஒரு புறாவைப் போன்று சாந்தமானதற்கு ஒப்பிடப்பட்டிருந்தார். 97 மகத்தானக் காரியங்கள் அமைதியான காரியங்களாயிருக்கின்றன. நண்பர்களே நீங்கள் அதை அறிந்துள்ளீர்களா? கவனியுங்கள். தாவரவியலின் வாழ்க்கையில், செடிகொடிகளின் ஜீவியத்தில், மரங்களின் ஜீவியத்தில், இன்னும் பூமியின் மேல் என்னவெல்லாம் உயிருள்ளதாக உள்ளதோ அவைகளுக்கு சூரியனே ஜீவன் அளிக்கிறது. அது ஜீவனைக் கொண்டு வருகிறது. சூரியனே அதைச் செய்கிறது. நாம் காற்றழுத்த ஆற்றலினால் தண்ணீரை மேலேக் கொண்டு வரும் விசைக்குழாயிலிருந்து ஒரு வாளி தண்ணீரைப் பெறக்கூடிய சத்தத்தைக் காட்டிலும் சத்தமேயில்லாமல் சூரியனால் கோடிக்கணக்கான காலன்கள் அளவுள்ள தண்ணீரை பூமியிலிருந்து இழுத்துக் கொள்ள முடிகிறது. பார்த்தீர்களா? அவைப் பெரிய காரியங்களாயிருக்கின்றன. அமைதியான காரியங்களே பெரிய காரியங்களாயிருக்கின்றன. உலகமானதுச் சுழலுவதை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா? கிரகங்கள் கோளப்பாதையில் கடந்து செல்வதை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? நீங்கள் எப்போதாவது அவைகளில் ஒன்றைக் கவனித்துக் கேட்டதுண்டா? அவை பெரிய காரியங்களாயிருக்கின்றன. சூரியோதயச் சத்தத்தை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? 98 ஓ, நாம் அதிகப்படியான இரைச்சலைப் பெற்றிருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு பித்தளை முரசும், அதிகமாக மேலும் கீழும் குதித்தலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஒரு நல்லக் கூட்டத்தை நடத்தவில்லை என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். ஒவ்வொருவரும் உச்சியில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களுடையக் கரங்களைத் தட்டிக் கொண்டும், மற்றக் காரியங்களைச் செய்து கொண்டுமிருக்க வேண்டும் என்றும் நாம் நினைக்கிறோம். இசையானது ஒரு தாளத்தில் இருக்கப் போவதாயிருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் நடைப்பிரகாரங்களில் மேலும் கீழுமாய் ஓட வேண்டும் என்றும் நாம் நினைக்கிறோம். நாம் அதை உடையவர்களாயிருந்து வந்தோம். அது என்ன நன்மையைச் செய்துள்ளது? அது எங்கே இருக்கிறது? அது இன்றைக்கு நம்மை எங்கே கொண்டு வந்துள்ளது? ஒரு கூட்டக் குழப்பத்தில், ஒரு கூட்ட ஸ்தாபனங்களண்டைக்கே கொண்டு வந்து, பிரிவினையை உண்டு பண்ணி, சகோதரத்துவத்தை அழித்துவிட்டது. நிச்சயமாகவே அது அதனையேச் செய்துள்ளது. அது பண்டைய பச்சைக்கிளி, பச்சைப்புழு மற்றும் எல்லாவிதமானப் பூச்சிகளும் அங்கே ஆரம்பத்தில் இருந்து வந்தன. யோபு அவைகளைக் கண்டான் இல்லை…யோவேல் அவைகளைக் கண்டான். “பச்சைப் புழு விட்டதை பச்சைக்கிளித் தின்றது, பச்சைக்கிளி விட்டதை வெட்டுக்கிளித் தின்றது”. இந்த விதமாக நாம் அடிமரம் வரை தின்று அரிக்கப்பட்டுவிட்டோம். 99 ஆனால் வேதமோ, “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” என்று கூறுகிறது. நாம் ஏதோ ஒரு காரியத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். 100 நாம் முழு உலகத்தையும் மற்ற எல்லாச் சத்தமிடுதலையும், போதுமான வெடிச்சத்தத்தையும், இரைச்சலையும் உடையவர்களாயிருந்து வந்தோம். நாம் போதுமான அளவிற்கு ஆர்ப்பாட்டமான ஆரவார தொனியையும், கூச்சலிடுதலையும், உணர்ச்சியூட்டி வசமிழத்தலையும் உடையவர்களாய் இருந்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை அது என்னச் செய்துள்ளது? அது சபையை கட்டியெழுப்பவில்லையே அது ஸ்தாபனங்களையே கட்டியெழுப்பியுள்ளது. அது மனிதர்களை இறுமாப்பான எண்ணங்களோடும், மதிப்பற்ற வெற்றுப்பகடியோடுமே செல்லச் செய்துள்ளது. எனவே நான் அப்படிப்பட்டக் காரியத்தை விரும்புகிறதில்லை. மேடையின் மேல் நடந்துச் சென்று, “ஓ, அவரை நோக்கிப் பாருங்கள். அவர் ஒரு இளவரசனாயிருக்கிறார். அவர் எப்படி உடை உடுத்தியிருக்கிறார் என்றும், ஒவ்வொன்றும் எப்படி மெருகேற்றப்பட்டுள்ளது என்றும் பாருங்கள். அவர் தன்னுடையப் பேச்சில் எப்படி உயிர் எழுத்துக்களையும் மற்றவற்றையும் உபயோகப்படுத்துவது என்பதை அறிந்துள்ளார்” என்று கூறுகிறார்கள். தேவன் தெரிந்து கொள்வது அதுவல்ல. 101 ஒரு நாள் ஒரு தீர்க்கதரிசி அதை எண்ணிப்பார்த்தான். அவன் ஒரு ஊழியக்காரனை அபிஷேகிக்கச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசியோ, “இவன் குடும்பத்திலேயே மிகப் பெரியவனாய் இருக்கிறான். எனவே இவன் சரியாகக் காணப்படுவான்” என்று கூறினான். ஆனால் தேவனோ அவனை மறுத்துவிட்டார். 102 எனக்கு அது என்னவென்றே தெரியாதிருப்பது போலவே, நீங்கள் அங்கு நிற்பதற்கு இளவரசர்களைப் போன்றிருக்க வேண்டியதில்லை. நீங்கள் உடுத்தியிருக்கிற ஆடைகளும் அதற்கு முக்கியமல்ல, அல்லது நீங்கள் பேசுகிற பேச்சுத்திறனும் அதற்கு முக்கியமல்ல. அது உங்களுடைய உட்புறத்தில் உள்ள ஏதோ ஒரு காரியமான அந்தத் தேவனுடைய சத்தமேயாகும். அதுவாகத்தான் அது உள்ளது. 103 அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி மற்றொருவனைக் கடந்து போனபோது, “அது அவனும் அல்ல. தேவன் அவனையும் மறுத்து விட்டிருந்தார்” என்றே கூறினான். பின்னர் மற்றொருவன் கடந்துச் சென்றான். அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி, “உங்களுக்கு இன்னுமொருவன் இல்லையா?” என்று கேட்டான். 104 அதற்கு அவர்கள், “எங்களிடத்தில் ஒரு சிறிய, சிவந்த மேனியையுடைய ஒரு பையன் இருக்கிறான். ஆனால் அவன் அங்கே மலைப்பாங்கான இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறினர். அது தாவீதாயிருந்தது. 105 அப்பொழுது அவர்கள் செம்முடிகொண்ட தலையையும், முகத்திலே பழுப்புப் புள்ளிகளையும், நிமிர்ந்திராமல் குறுகின தோள்பட்டைகளையுங்கொண்டு, ஆட்டுத் தோலினால் தன்னை சுற்றியிருந்த அந்தச் சிறுவனை அங்கே தூரத்திலிருந்துக் கொண்டு வந்தபோது, தேவன், “அது அவன்தான்” என்றார். 106 உங்களுடைய பெரிய உருவச்சிலைகளும், மதிப்பற்ற வெற்றுப்பகடியான காரியங்களெல்லாம் தேவனண்டை செல்கிறதில்லை. நீங்கள் DDD., Ph.D., அல்லது இரண்டு L.D., என்ற வேதாகமக் கல்லூரிப் பட்டங்களைப் பெற்றிருக்கலாம். நீங்கள் பேராயராகவோ, கத்தோலிக்க தலைமை குருவானவராகவோ அல்லது நீங்கள் இன்னும் வேறேதாவது பதவியிலோ இருக்கலாம். ஆனால் அதுவோ ஒன்றுமில்லாததிலிருந்து தேவன் ஏதோ ஒரு காரியத்தை உருவாக்கும்படி எடுக்கிறதாயுள்ளது. நீங்கள் ஒன்றுமே இல்லாதவர்களாயிருக்கக்கூடிய வரையில் தேவன் ஏதோ ஒரு காரியத்தை உடையவராயிருக்கிறார். நீங்கள் உங்களை வழியிலிருந்து விலக்கிக் கொள்ளும்போதே தேவனால் உள்ளே வர முடியும். நீங்கள் மிகப் பெரியவர்களாகவும், மிகச் சிறந்தவர்களாகவும் ஆகும் வரைக்கும் அவ்வளவு வெற்றுப் பகட்டாரவாரமாகவும், ஆசாரமுறையை கையாளும் விரைப்புத்தன்மைக் கொண்டவர்களாயிருக்கும்போதும், நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றையுமே இன்னும் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதுவோ தேவனுக்கு முன்பாக ஒரு தாழ்மையான இருதயத்தில் இருப்பதாகும். சகோதரர்களே நாம் அதை அறிவோம். நிச்சயமாகவே. நிச்சயம். 107 நீங்கள் சூரியன் உதிப்பதை ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள் இல்லை…கேட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் அதை ஒருபோதும் கேட்டதில்லை. நீங்கள் எப்போதாவது இரவிலே வெளியே சென்று பனித்துளிகள் விழும் சத்தத்தை கேட்டதுண்டா? அது இல்லாமல் நாம் என்ன செய்வோம்? பாருங்கள், அது புகழை எடுத்துக் கொள்கிறதில்லையே. 108 நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறவுள்ளேன். அது அப்படியே…சிறு அலைகளைக் கொண்ட தண்ணீர் ஒரு பெரிய இரைச்சலை உண்டுபண்ணாமல், மேலும் கீழும் குதித்து, நட்சத்திரங்களின் அழகை அதற்குள் பிரதிபலித்துக் காண்பிக்கிறது. ஆழமானச் சிறிய குளம் அமைதியாய் இருந்து, அந்த நட்சத்திரங்களின் அழகைப் பிரதிபலிக்கிறது. 109 இன்றிரவு நமக்குத் தேவை என்னவென்றால் அந்த ஆழமான ஐஸ்வரியமான அனுபவமே, அதாவது நமக்குள்ளாக ஆழத்தில் இருக்கும் ஏதோ ஒரு காரியமாகும். அதற்குச் சத்தமிட வேண்டியதில்லை. அதே சமயத்தில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் நாமோ நம்முடையச் சத்தமிடுதலின் பேரிலேயே எல்லா முக்கியத்துவத்தையும் செலுத்துகிறோம். அந்த அனுபவம் ஒருபோதும் அந்நிய பாஷைகளைப் பேசாமலிருக்கலாம். அதே சமயத்தில் அந்த அனுபவத்தை பெற்றிருந்திருக்கலாம். ஆனால் நாம் அதன் பேரிலேயே எல்லா முக்கியத்துவத்தையும் வைக்கிறோம். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] 110 அதற்கு பில்லி கிராஹாமினுடைய கூட்டத்தில், ஓரல் ராபட்ஸினுடையக் கூட்டத்தில் அல்லது என்னுடையக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமலிருக்கலாம். நீங்கள் கலந்துக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அதற்கு என்ன இருக்க வேண்டுமென்றால் தேவனுடைய நித்திய அன்பின் ஆழங்களேயாகும். அந்த ஆவி அவனுடைய உட்புறத்தில் உள்ளது. அதுவே நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உருவாக்குகிறது. 111 இந்தக் காலையில் அதைக் குறித்துதான் நான் பேசிக் கொண்டிருந்தேன். அதைத்தான் நான் இழுத்துக் கொண்டிருந்தேன். அதாவது சபையைக் கல்வாரிக்கு அருகே முன்னும் பின்னுமாக இழுத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அந்நிய பாஷை பேசியிருக்கிறக் காரணத்தினால்தான் என்றோ அல்லது நீங்கள் வேத வாக்கியங்களைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறீர்கள் என்ற காரணத்தினாலோ, அல்லது நீங்கள் யாரோ ஒருவருடையப் புத்தகங்களைப் படிக்கிறதினாலோ, மற்ற நபரைக் காட்டிலும் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கிறதினாலோ என்று நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள். அவரோ, “நகரத்திலே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிறவர்கள் மேல் ஒரு அடையாளம் போடு” என்றார். இன்றிரவு அவர் நம்முடைய நகரங்களில் யார் மேல் அடையாளம் போடுவார்? பாருங்கள், அது ஆவியானவருடைய ஆழங்களாயிருக்கிறதேயன்றி ஆழமற்றதாயிருக்கவில்லை. அது வாதுமை மரத்தின் கொட்டையின் மேல் உள்ள ஓடு அல்ல, அந்த ஓட்டின் கீழ் காணப்படும் பருப்பு விதையே நல்லதாயிருக்கிறது. அது ஓட்டின் கீழ் உட்புறத்தில் உள்ள வாதுமை மர பருப்பு விதையாயிருக்கிறது. நீங்களோ ஒரு பெரிய காலியான ஓட்டையே பெற்றுள்ளீர்கள். அங்கே உள்ள அந்த ஓட்டிற்குக் கீழே ஒன்றையுமேப் பெற்றிருக்கவில்லை. இன்றிரவு நமக்குத் தேவை என்னவென்றால் தேவனுடைய அன்பின் ஆழங்களேயாகும். 112 எலியா அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டபோது, அவனை ஒன்றுமே தொல்லைப்படுத்தவில்லை. 113 இவை எல்லாவற்றிலும் நீங்கள் என்னத்தைக் கேட்டிருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் போய்விடலாம். நீங்கள் பில்லி கிரஹாமைக் குறித்து கேள்விப்படலாம். நீங்கள் ஓரல் ராபட்ஸைக் குறித்துக் கேள்விப்படலாம். நீங்கள் மற்ற மகத்தான மனிதர்களைக் குறித்து கேள்விப்படலாம். அந்த மனிதர்களுக்கு விரோதமாக ஒன்றுமில்லை. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள். ஆனாலும் அந்த இரைச்சலுக்கு செவி கொடுக்காதீர்கள். அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்திற்கே செவி கொடுங்கள். அதுவே மானிட இருதயத்திற்குள்ளாக வருகிற ஆழமான ஒரு காரியமாயிருக்கிறது. அதுவே உங்களிடத்திலிருந்து எல்லா மூடத்தனத்தையும் தூரமாய் எடுத்துப் போடுகிறது. அது உங்களிடத்திலிருந்து முழு உலகத்தையும் தூரமாய் எடுத்துப் போட்டு விடுகிறது. அதுவே உங்களை உலகத்தின் காரியங்களை வெறுக்கும்படி செய்து, தேவனுடையக் காரியங்களை நேசிக்கும்படிச் செய்கிறது. அதுதான் அந்த ஆழங்கள், அந்தக் குளமே தேவனுடைய நித்திய மகிமையின் நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கிறதாய் உள்ளது. அது கண்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறக் காரியமாயுள்ளது. அதுவே மகிமையால் நிறைந்ததும், சொல்லி முடியாததுமானச் சந்தோஷத்தை வரவழைக்கிறது. உங்களுக்கு மற்ற எல்லாக் காரியங்களும் தவறிப்போகும்போது, அதுவே உங்களை நிற்க வைக்கிறது. அது…சுகவீனம் உண்டாகிறபோது, அல்லது மரணமே கூட வருகிறபோதும், அது இன்னமும் அதற்குள் தேவனுடைய ஆசீர்வாதத்தின் பிரதிபலிப்பைப் பெற்றுள்ளது. அந்த ஆழமானச் சிறியக் குளமானது பரலோகத்தை பிரதிபலிக்கிறதேயன்றி சிற்றலையையும், தண்ணீர் இரைச்சலையும் பிரதிபலிக்கிறதில்லை. சிற்றலைக் கொண்ட தண்ணீர்கள் மிகவும் ஆழமாயிருப்பதில்லை. அமைதியான தண்ணீர்களே ஆழமாய் பாய்ந்தோடுகின்றன. 114 நண்பர்களே, நாம் இராபோஜன மேஜையண்டை வருகின்றபோது அதை நினைவுகூறும்படி இன்றிரவு தேவன் நமக்கு உதவி செய்வாராக, நாம் வெளிப்புறத்தில் என்ன செய்தாலும், எத்தனை நல்லக் காரியங்களை நாம் செய்திருந்தாலும் அது முக்கியமல்ல. 115 நீங்களோ, “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நான் சபைக்குச் செல்கிறேன். என்னால் முடிந்தளவு நான் சிறந்த முறையில் ஜீவிக்க முயற்சிக்கிறேன்” என்று கூறலாம். நல்லதுதான். சகோதரனே அதற்கு விரோதமாக ஒன்றுமேயில்லை. “சகோதரன் பிரான்ஹாம், நான் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறேன். நான் ஆவியில் சத்தமிட்டிருக்கிறேன்.” அது நல்லதுதான். ஆனால் சகோதரனே நான் பேசிக் கொண்டிருப்பது அதைக் குறித்ததல்ல. அது இன்னமும் அதைக் குறித்ததல்ல. நான் பேசிக் கொண்டிருப்பது அதைக் குறித்தல்ல. 116 நான் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் குறித்தே, அந்த ஐஸ்வரியமான, இராஜரீகமான ஒன்றைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன். அதாவது, அநேக வருடங்களுக்கு முன்பு, பாவியான ஒரு பையன் எழும்பி, பீடத்தண்டை வரும்போது, பண்டைய தாய்மார்கள் அப்பொழுது தங்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட இந்த நடைப் பிரகாரங்களில் இங்கே வருவதை நான் வழக்கமாகக் காண்பதுண்டு. 117 இன்றைக்கோ நான் ஒரு பீட அழைப்பை விடுக்கும்போது, ஒரு பையன் வருவதைக் கண்டால், அப்பொழுது அவர்கள் அமர்ந்துகொண்டே தங்களுடைய வாயில் மெல்லும் பசை மிட்டாயைப் போட்டு மென்றுகொண்டிருக்கிறார்கள். காரியம் என்ன? நீங்கள் அதைக் குறித்துக் கேட்பதை இழந்துவிட்டிருக்கிறீர்கள். 118 நீங்கள் என்னத்தைக் கேட்டிருக்கிறீர்கள்? நீ எதைக் கேட்கிறாய்? நாம் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். 119 நீங்கள் தொலைக்காட்சியிலும், வானொலியிலும், உங்களுடைய மாதஇதழ்களிலும், உங்களுடையச் செய்தித்தாள்களிலும் கூறுகிறதையே கேட்கிறீர்கள். அதாவது இந்தத் தேசத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சுழற்காற்று உண்டாகப் போகிறது என்று கூறும் காரியங்களைக் கேட்கிறீர்கள். நீங்கள் எல்லா அபாய எச்சரிப்பையும் நாள் முழுக்க உங்களுடையத் வானொலியில் ஒலிபரப்பப்படும் அந்த அர்த்தமற்ற எல்லாவற்றையும் தொடர்ந்து கேட்பதும், துப்பாக்கிக் குண்டுகள் அல்லது வெடி குண்டுகள் வெடிக்கும்போது சம்பவிக்கிறதையும் என்னத்திற்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அந்தக் காரியங்களுக்கு செவிக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒரு முறைத் தட்டுகிறார்.—ஆசி.] 120 நானோ, “மேலே ஏறிவா, உத்தமமும், உண்மையுமுள்ள என்னுடைய ஊழியக்காரனால் இது நன்றாக செய்யப்பட்டது” என்று கூறுகிற ஒரு சத்தத்தைக் கேட்கும்படிக்கே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 121 நீ எதைக் கேட்கிறாய்? உங்களுக்குத் தெரியுமா? நாம் உலகத்தின் எல்லாக் காரியங்களுக்கும், அதைப்போன்றக் காரியங்களுக்கு மிகவும் கவனமாய்ச் செவிகொடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம் என்று நான் கருதுகிறேன். ஆனால் நம்மால் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. 122 நம்முடைய போதகர்களோ, “வெறுமென சபையில் சேர்ந்து கொள்ளுங்கள். அதுவே போதுமானதாகும்” என்று கூறுவதை நாம் கேட்கிறோம். மேலும் அவர்களில் சிலர், “அந்நிய பாஷையில் பேசுங்கள். அதுவே போதுமானது” என்று கூறுவதை நாம் கேட்கிறோம். இன்னும் அவர்களில் சிலர், “வெறுமெனச் சத்தமிடுங்கள். அது போதும்” என்று கூறுகின்றனர். 123 அவைகளின் மூலமாக உங்களால் சற்றேனும் அதைக் கேட்க முடியாது. ஆனால் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தமே ஐஸ்வரியமும், ஆழமான ஏதோ ஒரு காரியத்தை ஜீவியத்தில் பொருத்தி நீங்கள் இருக்க வேண்டிய பிரகாரம் உங்களை உருவாக்குகிறது. 124 ஒரு கோதுமை கோதுமையைச் சுமக்கிறதில்லை ஏனென்றால் அது ஒரு திராட்சைச் செடியின் மேல் உள்ளது இல்லை அது ஒரு தண்டின் மேல் உள்ளது. ஒரு களையும் ஒரு தண்டின் மேல் தான் உள்ளது. ஆனால் கோதுமையானது கோதுமையாய்ப் பிறப்பிக்க அந்தச் செடியில் உள்ள ஜீவனை எடுத்துக் கொள்கிறது. தண்ணீரானது கோதுமையின் மேலும், களையின் மேலும் விழுந்து தண்ணீரைப் பாய்ச்சும், அவைகள் இரண்டுமே அதில் களிகூரும். அவைகள் இரண்டுமே அதில் வளரும். 125 புருஷர்களும், ஸ்திரீகளும் சபையைச் சேர்ந்து கொண்டு, சத்தமிட்டு, தேவனைத் துதித்து, அந்நியப் பாஷைகளைப் பேசி, ஆவியில் நடனமாடி, தசமபாகங்களைச் செலுத்தி, வளர்ந்தவர்களாய் காணப்படமுடியும். அதே சமயத்தில் அவர்களுடைய இருதயங்களில் அந்த அமர்ந்த மெல்லிய ஐஸ்வரியமான தேவனுடையச் சத்தமும், ஆழமான அன்பும் இன்னமும் பெறாமலிருக்க முடியும். 126 “என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும் அன்பு எனக்கிராவிட்டால், நான் இன்னமும் ஒன்றுமில்லை. நான் மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. நான்—நான்—நான் அந்நியப் பாஷைகளைப் பேசினாலும், மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், நான் ஒன்றுமில்லை”. புரிகின்றதா? உங்களுடைய இருதயத்தில் பேசுகிற அமர்ந்த மெல்லியச் சத்தமே அந்த ஒவ்வொரு மனப்பான்மையையும் மாற்றுகிறது. அதுவே சுபாவத்தையும் மாற்றுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாகின்றீர்கள். 127 நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்? நண்பனே, அது நீ என்னத்தை கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதைப் பொருத்ததின் பேரில் உள்ளது, நீ இங்கே…கேட்டுக்கொண்டிருப்பாயானால்…எந்தவிதமான விமரிசனம் இல்லை, எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. ஆனால் நீங்கள் எங்கோ நடைபெறும் ஒரு மகத்தான எழுப்புதலைக் குறித்து கேள்விப்பட்டு, நீ அதற்குச் செவிகொடுத்துக் கொண்டிருப்பாயானால், அங்கே பத்தாயிரம் ஜனங்கள் கூடியிருக்கின்றனர் என்று கூற கேட்பாயானால், போ. ஆனால் நீ தவறானக் காரியத்திற்குச் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறாய். “நான் அங்குப் போய் பார்ப்பேன். அவர்களிடத்தில் பெரிய ஜனக்கூட்டங்கள் உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள்”. அது ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. பந்தய மைதானங்கள் அந்தக் கூட்டங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தக் கூட்டங்களைக் கொண்டுள்ளன. நெளிந்து உருண்டு ஆடும் நடனக்காரர்கள் அந்தக் கூட்டத்தைக் கொண்டுள்ளனர். “நான் அங்கு போகப் போகிறேன்…நான் ஏதோ ஒரு காரியத்திற்காக அங்கே போய்க் கொண்டிருக்கிறேன்”. 128 நீங்கள் வெறெந்தக் காரியத்திற்காவது செல்வீர்களேயானால்…ஆனால்…நீங்கள் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைத் தவிர வெறெந்தக் காரியத்திற்காவது செவிகொடுத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது குகைக்குள்ளாகத் திரும்பி வாருங்கள். நம்மால் ஆயத்தமாக முடியும் வரைக்கும் சூரைச் செடியின் கீழிருக்கவே திரும்பிச் செல்வோம். நீங்கள் அமைதியாக பற்றிக் கொண்டுக் காத்திருங்கள். இடிமுழக்கங்கள் கடந்து செல்லட்டும். பூமியதிர்ச்சியானது குலுங்கட்டும். பலத்த காற்றடிக்கிற முழக்கம் கடந்துப் போகட்டும். அக்கினி பெருக்கெடுத்துப் பரவட்டும், இன்னும் என்னெவெல்லாமோ நிகழட்டும். நானோ அந்தப் பாடலைக் குறித்தே சிந்திக்கிறேன்: கர்த்தாவே, இருதயங்கள் கொழுந்துவிட்டு எரியும்போது, எப்படிக் காத்திருக்க வேண்டும் என்று எனக்குப் போதியும், என் பெருமையை நான் தாழ்த்தி, உம்முடைய நாமத்தைத் தொழுது கொள்வேனாக; என் விசுவாசம் தொடர்ந்துப் புதுப்பிக்கப்பட்டு, என் கண்கள் உம்மேல் தொடர்ந்திருப்பதாக, நான் என்னவாயிருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, நான் அவ்வாறே இப்புவியின் மீது இருப்பேனாக. அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, தங்களுடைய பெலனைப் புதுப்பித்துக் கொள்வார்கள்; அவர்கள் கழுகுகளைப் போல செட்டைகள் அடித்து எழும்புவார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர். ஆசி.] அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்; கர்த்தாவே, எனக்குப் போதியும், கர்த்தாவே எப்படிக் காத்திருக்கவேண்டும் என்று எனக்குப் போதியும். 129 இடிமுழக்கங்கள் கடந்து செல்லட்டும், அக்கினி பெருக்கெடுத்துப் பரவி கடந்து போகட்டும். ஆனால் நானோ, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், சூரைச்செடியின் கீழிருந்து வெளியே வாருங்கள். உங்களுடையக் குகைகளிலிருந்து வெளியே வாருங்கள்” என்று கூறுகிற அந்த அமர்ந்த மெல்லியச் சத்தத்தைக் கேட்பேனாக. 130 நான் என்னுடைய விசுவாசம் திரையிடும்படி…அவருடைய இரத்தத்தில் திரையிட்டு, நடந்து சென்று, “ஆம், கர்த்தாவே, நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன்” என்று கூறி அவருடைய முகத்துக்கு முன் செல்ல விரும்புகிறேன். நாம் ஜெபம் செய்வோமாக. 131 ஓ, கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே, கர்த்தாவே எங்களிடத்தில் இரக்கமாயிரும். நாங்கள் இப்பொழுது சத்தத்தைக் கேட்கக்கூடிய தேவையுள்ளவர்களாய் நிற்கிறோம். கர்த்தாவே, எங்களுடைய சத்தங்கள் மேலே வந்துள்ளன. 132 இப்பொழுதோ நாங்கள் அநேகச் சத்தங்களைக் கேட்டிருக்கிறோம். அதாவது, “இங்கே இந்தச் சபைக்கு வாருங்கள். நீங்கள் எங்களுடையச் சபையில் சேர்ந்து கொள்வீர்களாயானால் நலமாயிருக்குமே. நாங்கள் இந்தப்பட்டிணத்தில் மிகச்சிறந்த குழுக்களை உடையவர்களாகவும், மிகச் சிறந்த ஆடை அணிந்துள்ள ஜனங்களை உடையவர்களாகவும் இருக்கிறோம். எங்களுடைய இடங்களுக்கு நகராண்மைக் கழகத்தலைவர் செல்கிறார்” என்று கூறுகிறதே மிக அதிகமாக உள்ளன. 133 கர்த்தாவே, அநேக ஜனங்கள் தங்களுடையக் கூட்டங்களில் ஆளுநர்கள் மற்றுமுள்ளோர் வந்து உரை நிகழ்த்த உள்ளனர் என்று கூறுகிறார்கள். ஓ தேவனே, கர்த்தாவே, அதை என்னிலிருந்து விலக்கிக் காத்தருளும். கர்த்தாவே, என்னை ஒரு குகைக்குள் மறைத்து காத்திருக்கச் செய்யும். ஆளுநர் என்னக் கூறுகிறார் என்பதைக் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நானோ என்னுடைய இரட்சகரின் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தத்தைக் கேட்க விரும்புகிறேன். நான் உம்பேரில் காத்திருக்கும்போது, என்னுடைய பெலன் புதுப்பிக்கப்படும்படி, கர்த்தாவே, ஓ, காத்திருக்க எனக்கு உதவி செய்யும். 134 கர்த்தாவே, இந்தச் சபைக்கு உதவி செய்யும், அவர்கள் உம்பேரில் காத்திருந்து, தங்களுடைய விசுவாசத்தை புதுப்பித்து, தங்களுடையப் பெலனைப் புதுப்பித்து, கழுகுகளைப் போல செட்டைகள் அடித்து எழும்புவார்களாக. கர்த்தாவே, அவர்கள் இரைச்சலை அல்ல, ஆரவாரத்தை அல்ல, ஆனால் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தத்திற்கே செவிக் கொடுத்துக் கொண்டிருப்பார்களாக. 135 கர்த்தாவே, இன்னும் ஒரு சில நாட்களில், நான் அங்கே தொலைவில் உள்ள ஒரு குகைக்குள்ளாகக் காத்திருக்கும்படிச் செல்லப் போகிறேன். ஓ, தேவனே, கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும், உலகத்தின் காரியங்களுக்கும், புகழுக்கும், கீர்த்திக்கும், இந்த உலகம் அளிக்கக்கூடிய எந்த மாயையான காரியத்திற்கும் என்னுடைய செவிகளைச் செவிடாக்கி, என்னைக் குருடாக்கும். கர்த்தாவே, நான் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தத்தைக் கேட்கும் வரை அங்கேயேத் தரித்திருப்பேனாக. அதன்பின்னர் உம்முடைய ஊழியக்காரனாகிய நான் வந்து, கழுகின் செட்டைகளைக் கொண்டு எழும்புவேனாக. இதை அருளும் கர்த்தாவே. 136 இந்தச் சிறு சபையை ஆசீர்வதியும். எங்களுடையச் சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். கர்த்தாவே அவருடைய வயிற்றிலிருந்து சுகவீனத்தை எடுத்துப்போட்டு, அதை அவரிடத்திலிருந்தே விரட்டியடியும். கர்த்தாவே, வழக்கமாக அவர் செய்துவரும் அன்றாடப் பணிகளில் தொடர்ந்து அவரை ஈடுபடச் செய்யும். அவர் இங்கே திரும்பி வந்துப் புதுப்பிக்கப்படட்டும். “அவர்கள் புதுபெலன் அடைவார்களே”. இதை அருளும், கர்த்தாவே. 137 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே நாங்கள் இப்பொழுது இராபோஜன மேஜையண்டை வருகிறோம். நீர், “அபாத்திரமாய் போஜனம்பண்ணுகிறவன், கர்த்தருடையச் சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனம்பண்ணுகிறான்” என்றீர். எங்களுடைய ஆத்துமாக்களையும், எங்களுடைய இருதயங்களையும் ஆராய்ந்துப் பார்க்கும்படிக் கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும், எங்களைக் குறித்த அசுத்தமானக் காரியம் ஏதாகிலும் உண்டா என்று பார்க்கும்படி எங்களைச் சோதித்தறியும். அப்படி ஏதாகிலும் காணப்படுமாயின், ஓ, தேவனே, நாங்கள் உம்பேரில் தாழ்மையாய் காத்திருக்கையில், எங்களுக்கு மன்னியும், நாங்கள் இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். கர்த்தாவே, என்னுடைய முழங்கால்களில் காத்திருக்கும்படி எனக்கு போதியும், உமக்கே உரிய நல்ல நேரத்தில் நீர் என்னுடைய வேண்டுதல்களுக்கு பதிலளியும், (அது சரியாயிருக்கும்.) மற்றவர்கள் என்னச் செய்கிறார்கள் என்பதன் பேரில் நம்பிக்கைக் கொள்ளாதிருக்க எனக்குப் போதியும். ஆனால் உம்மிடத்திலிருந்து வரும் பதிலுக்காகவே ஜெபத்தில் காத்திருக்கிறேன். 138 பரலோகத்திலிருந்து வரும் பதிலை, அதைத்தான் நான் விரும்புகிறேன். நான் அவருடைய சத்தத்தைக் கேட்க விரும்புகின்றேனேயன்றி, மேலாளரினுடையச் சத்தத்தை அல்ல, நகராண்மைக் கழக தலைவருடையச் சத்தத்தை அல்ல, ஆளுநருடைய சத்தத்தை அல்ல, பேராயருடைய சத்தத்தை அல்ல, கர்த்தாவே, நான் உம்முடைய சத்தத்தையே கேட்க விரும்புகிறேன். அந்தச் சாந்தமான, மென்மையான பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் பேசி, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்கிறார். ஆம், கர்த்தாவே, இப்பொழுது நாங்கள் ஒரு சூரைச் செடியின் கீழ்ப்படுத்துக்கொண்டிருக்கிறோம். அவர் என்னக் கூறுவார் என்பதைக் காணும்படி நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். 139 இப்பொழுது உங்கள் ஒவ்வொருவரையும், கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். எத்தனை பேர் ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவதை நாங்கள் காணட்டும். நீங்கள், “கர்த்தாவே, காத்திருக்க எனக்குப் போதியும். எனக்குப் போதியும். என்னுடைய எல்லாப் பெருமையையும் நான் மறப்பேனாக. மற்றவர்கள் சென்று இதைப்போன்ற மகத்தானக் காரியங்களைச் செய்யும்போது, நான் என்னுடையப் பெருமையைத் தாழ்த்தி உம்முடைய நாமத்தைத் தொழுது கொள்வேனாக. மற்றவர்கள் என்னச் செய்கிறார்கள் என்பதின் பேரில் நம்பிக்கைக் கொள்ளாதிருக்க எனக்குப் போதியும். ஆனால் உம்மிடத்திலிருந்து வரும் பதிலுக்காகச் ஜெபத்தில் அப்படியேக் காத்திருப்பேனாக” என்று கூறுங்கள். 140 எலியா செய்தது போன்றே, அவன் அங்கே பின்னால் காத்திருந்தான். அவன் இடிமுழக்கத்தைக் கேட்டான். அவன் மின்னலைக் கேட்டான். அவன் கன்மலை நொருங்குவதைக் கேட்டான். அக்கினியைக் கேட்டான். அவன் பலத்தப் பெருங்காற்றைக் கேட்டான். ஆனால் அவன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது அதுவல்ல. அவைகள் தீர்க்கதரிசியை அசைக்கக்கூட இல்லை. அவர் அதைக் கடந்து போகச் செய்தார். ஆனால் அந்த அமர்ந்த மெல்லியச் சத்தம் உண்டானபோது, அவன் தன் சால்வையை எடுத்து, தன் முகத்தை மூடிக்கொண்டு கெபியின் வாசலுக்குச் சென்றான். அப்பொழுதுக் கர்த்தர், “போய், அங்கே அந்தப் பர்வதத்தில் நில்” என்றார். அதைத்தான் நானும் கேட்கவிரும்புகிறேன், அதாவது “பர்வதத்தில் நில்” என்பதையே. சரி. 141 இப்பொழுது இது இராப்போஜனத்திற்கான நேரமாய் உள்ளது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. முதலில் நாம் இதைச் செய்வதற்கு முன்பு, தேவன் அவர்களிடத்தில் பேச வேண்டும் என்று உண்மையாகவே விரும்பித் தங்களுடையக் கரங்களை உயர்த்தின ஒவ்வொருவருக்காகவும் நாம் ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்றிரவு இங்கு உங்களில் எவரேனும் ஒரு சூரைச்செடியின் கீழ் இருக்கின்றீர்களா? உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நிச்சயமாக, நிச்சயமாகவே. நாம் அங்குதான் இருக்கிறோம். ஆனால் உங்களில் அநேகர் இங்கு குகையில் காத்திருக்கிறீர்கள். 142 இந்த எல்லாக் காரியங்களும் கடந்துச் சென்றதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் பில்லிகிரஹாமின் மகத்தான எழுப்புதல்களையும், ஓரல் ராபட்ஸைக் குறித்தும், எனக்குரியதைக் குறித்தும் மற்றும் எங்குமுள்ளதைக் குறித்தும், டாமி ஆஸ்பார்னைக் குறித்தும், டாமி இக்ஸைக் குறித்தும், மற்றும் எங்குமுள்ளதைக் குறித்தும், மற்றும் இந்த எல்லாக் காரியங்களும் கடந்துப் போகிறதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் அது அங்கே இருக்கிறது? அந்தச் சத்தம் எங்கே உள்ளது? 143 நீங்கள். “நான் ஜெஸ்ஸப் கூட்டத்தாரோடு சத்தமிட்டிருக்கிறேன். நான் வாத்திய சுரமண்டலங்களைக் கொண்டு ஆவியில் நடனமாடியிருக்கிறேன். நான் இந்த மற்றெல்லாக் காரியங்களையும் செய்திருக்கிறேன். நான் அவைகள் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். ஆனாலும் சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் இழக்கப்பட்ட ஆத்துமாக்களின் காரணமாக இளைப்படைய முடியாத அளவிற்கு, அந்த இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்கான ஒரு பாத்திரத்தை என் மேல் போட்டு, பிழிந்தெடுக்கும் அந்த ஒரு காரியம் எங்கே உள்ளது?” என்று கேட்கலாம். 144 இப்பொழுது, அந்தவிதமான ஓரே காரியம்தான் உள்ளே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் வேதம் கூறியுள்ளது. “நகரத்தில் செய்யப்படுகின்ற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிறவர்கள் மேல் மாத்திரம் ஒரு முத்திரைப் போடு”. ஓ. நண்பர்களே. அங்குதான் நமக்கு அது தேவை. நாம் மீண்டும் ஜெபம் செய்வோமாக. 145 கர்த்தாவே, தயவுக் கூறும் கர்த்தாவே! ஓ, நான் மிகவும் அதிகமாய் பாடியிருக்கலாம். நான் மிக அதிகமாய்ப் பிரசங்கித்திருக்கலாம். நான் மிக அதிகமாகச் சத்தமிட்டிருக்கலாம். நான் மிக அதிகமாகக் கதறியிருக்கலாம். ஆனால் என்னால் மிக அதிகமாக ஒருபோதும் ஜெபிக்க முடிந்ததில்லை. ஓ, தேவனே, என்னை ஆராய்ந்துப் பார்த்து, என்னைச் சோதித்தறியும். 146 சற்று முன்னர் அந்த ஆழமானக் குளங்கள் எப்படி அந்த நட்சத்திரங்களை அவைகள் பிரதிபலிக்கின்றன என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். கர்த்தாவே, எங்களுக்குள்ளாக உம்முடைய ஆவியின் ஆழத்தை வையும், தீர்க்கதரிசியாகியத் தாவீது கூறினது போல, “அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை வழிநடத்தியருளும்”. சிற்றலைகளைக் கொண்ட தண்ணீர்களண்டை அல்ல. கர்த்தாவே, அங்கே அமர்ந்தத் தண்ணீர்களண்டை என்னை நடத்தும். என்னை அமைதிப்படுத்தும். நான் அமைதியிழந்தவனாயிருக்கிறேன். நான் முற்றிலும் நிலைகுலைந்தவனாயிருக்கிறேன். 147 எனக்குத் தெரிந்தமட்டில் நீர் என்னை செய்யும்படிக் கூறின ஒவ்வொரு காரியத்தையும் நான் செய்திருக்கிறேன். நான் தேசத்தைக் கடந்து, உலகத்தைச் சுற்றிலும் சென்று, பிரசங்கித்து, கதறி, சம்மதிக்கச் செய்துள்ளேன். கர்த்தாவே, அதைச் செய்து கொண்டிருக்கிறது நீரேயன்றி, ஒரு மனிதன் அல்ல என்று காண்பிக்கும்படியாக நீர் அந்த மேசியாவின் அடையாளத்தை வெளிப்படுத்திக்காட்ட உண்மையுள்ளவராயிருந்து வருகிறீர். நான் அதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனாலும் கர்த்தாவே, நான் இன்றிரவு சூரைச்செடியின் கீழே இருக்கிறேன். நானோ, “ஏன் அவர்கள் மனந்திரும்பக் கூடாது என்றும், கர்த்தாவே, ஏன் இந்த அமெரிக்காவினால் இதைக் காணமுடியவில்லை?” என்றே வியந்துக் கொண்டிருக்கிறேன். அவளுடைய புலன்கள் அந்த அளவிற்கு மந்தமாகியுள்ளதா? சபையானது அவ்வளவு இறுக்கமாக அந்தளவில் தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டதா? அவர்கள் ஒத்துழைப்பளிக்க மாட்டார்கள். அவர்கள் விமரிசனம் செய்வதைத் தவிர வேறொன்றையும் செய்ய மாட்டார்கள். 148 ஆனால் எலியா சூரைச்செடியின் கீழிருந்தபோது, நீர் அதே சமயத்தில் பாகாலுக்குத் தங்களுடைய முழங்கால்களை முடக்காதிருக்கிற ஏழாயிரம் பேரை உடையவராயிருந்தது போல இன்றிரவும் நீர் உடையவராயிருக்கிறீர் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இன்றைக்குப் பூமியிலே கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கும் அநேகப் பரிசுத்தவான்களை நீர் உடையவராயிருக்கிறீர். 149 ஓ, கர்த்தாவே, எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைச் சோதித்தறிந்து, உம்முடைய அளவுகோலுக்குள் எங்களை நிறுத்தி வைத்துக் கொள்ளும். நாங்கள் குறைவுள்ளவர்களாகக் கண்டறியப்படுவதை நாங்கள் காண்போமேயானால், ஓ, கர்த்தாவே, அப்பொழுது எங்களுடைய பாவங்களிலிருந்து எங்களை சுத்திகரியும். நாங்கள் என்னவாயிருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அவ்வாறே எங்களை உருவாக்கும். இந்தச் சபையில் உள்ள ஒவ்வொருத் தனிப்பட்ட நபருக்கும் அதைச் செய்தருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 150 இப்பொழுது இது இராஜபோஜனத்திற்கான நேரமாய் இருக்கப் போகிறது. இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். யாவரும் இங்கிருந்துப் போக வேண்டும். இராபோஜனம் எடுக்க விரும்பாதவர்கள் இருந்தால், புதன் கிழமை இரவு இங்கு மீண்டும் நடைபெறவுள்ள கூட்டத்தில் உங்களைச் சந்திப்போம். 151 எனக்காக ஜெபிக்க மறந்துவிடாதீர்கள். இப்பொழுதே அது எனக்குத் தேவையுள்ளதாயுள்ளது. இன்னும் அடுத்த ஒரு சில தினங்களிலும் எனக்குச் ஜெபம் தேவைப்படுகிறதாயிருக்கப் போகிறது. இப்பொழுது இதை வெறுமென சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் உங்களுடைய இருதயத்தில் எனக்காக பாரங்கொண்டு, எனக்காக ஜெபியுங்கள். எனக்கு உங்களுடைய ஜெபங்கள் தேவையே. நான் பல்வேறுபட்ட வித்தியாசமான இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த தீர்மானித்துள்ளேன். ஏதோ ஒரு காரியம் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. என்னால் இயன்ற மட்டும் என்னுடையச் சொந்தப் பெலத்தில் நான் சென்றுள்ளேன். எனக்காகவே நான் தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்தையும் பெற வேண்டியவனாயிருக்கிறேன். அவர் மற்றவர்களுக்காக எனக்குக் காண்பிப்பார். ஆனால் நானோ எனக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். எனக்கு அது தேவை, எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் ஜெபிப்பீர்களேயானால், அப்பொழுது அவர் அதை அனுப்புவார். 152 நான் இன்றைக்கு சுற்றிலும் வலம் வந்து கொண்டே, அதைச் சுற்றிலும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். சகோதரன் ராய் அவர்களே, நான் உங்களுடைய வீட்டிற்கு வெளியே இருந்தேன். ஆனால் நான் உள்ளே வர விரும்பவில்லை. ஏனென்றால் அங்கே ஒரு கார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நான் ஒரு முறை உங்களிடத்திற்கு விஜயம் செய்ய உங்களுக்கும், சகோதரி ஸ்லாட்டர் (Slaughter) அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். மேடாவும், நானுமாகச் சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான், “பரவாயில்லை, நாம் சற்று நேரம் கழித்து திரும்பிச் செல்வோம்” என்றேன். ஆனால் நான் மற்றொருக் காரியத்தில் ஈடுபட்டிருந்தபடியால் திரும்பிவரவில்லை. சுற்றிக்கொண்டே போய், வீதிகளைச் சுற்றிலும் வலம் வந்து கொண்டே. “ஓ, தேவனே. ஏதோ ஒரு காரியம் செய்யப்பட வேண்டுமே. நான் உம்மை எங்காவது அப்படியேப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன். 153 நேரமோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தகாரமோ சூழ்ந்துள்ளது. முடிவின் நேரம் இங்குள்ளது. நள்ளிரவிற்கு ஒரு நிமிடமே உள்ளது. சத்துருவின் சமுகத்தைப் பார்த்தால், குலுக்குதலும், வெறுப்புணர்வுகளும், பதட்டநிலையும், உலகத்தின் இறுக்க முகமாகவே உள்ளது. உங்களுடைய ஆக்கினைத்தீர்ப்பை அறியாமலிருக்கிறீர்கள். புரிகின்றதா? ஓ, என்னே! நாம் இப்பொழுதே கழுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்பி, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அவருடைய கரங்களுக்குள்ளாகப் பறந்து செல்வோமாக. 154 இப்பொழுது இராப்போஜனத்திற்காகத் தரித்திருக்க விரும்புகிற யாவரோடும், அதாவது நாங்கள் இந்த மணிநேர ஐக்கியத்தில் உங்களோடு இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம். 155 இப்பொழுது நீங்கள் கொரிந்தியர் முதலாம் நிருபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதில் 11-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். சகோதரனே நெவில், நீங்கள் விரும்பினால், இப்பொழுதே நீங்கள் அதை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். [சகோதரன் நெவில் கொரிந்தியர் முதலாம் நிரூபம் 11-ம் அதிகாரத்தில், 23 முதல் 32 முடிய வாசிக்கிறார்.—ஆசி.] நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு, நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்னக் கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 156 அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அது இந்தவிதமாய், அதாவது, “நாம் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுவோமேயானால், கர்த்தருடையச் சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், நமக்கு நாமே ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறோம். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்” என்று உள்ளது. நாம் இராபோஜனம் எடுக்க வரும்போது, புரிந்துகொள்ளுங்கள். 157 ஒவ்வொரு கிறிஸ்தவனும் இராப்போஜனம் எடுக்க வேண்டும். அது உங்களுடைய கடமையாயிருக்கிறது. அது ஒரு பலப்பரீட்சையாயிருக்கிறது. புரிகின்றதா? இயேசுவோ, “நீங்கள் அதில் பங்குபெறவில்லையென்றால், என்னிடத்தில் உங்களுக்கு பங்கு இல்லை” என்றார். புரிகின்றதா? 158 “ஆனால் அபாத்திரமாய்ப் போஜனம்பண்ணுகிறவன், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.” அதாவது நீங்கள் இன்னமும் வெளியில் உலகத்தோடிருந்து கொண்டு, உலகத்தின் காரியங்களைச் செய்துகொண்டே, அதே சமயத்தில் நீங்கள் இராபோஜனம் எடுப்பதை ஜனங்கள் காண்பார்களேயானால், அப்பொழுது நீங்கள் தவறானக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் உங்களுக்கு அவமானத்தை மாத்திரமே வருவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது அது உங்களுக்குத் தீஙகை மாத்திரமே இழைக்கும். அது தேவனுக்கு தீங்கிழைக்கும் என்பதல்ல. அது உங்களுக்கு தீங்கிழைக்கும். ஆகையால் எந்த ஒரு நபரும் தங்களைத் தாங்களே சோதித்தறிய வேண்டும். 159 நாம் இந்தப் புனிதமான நேரத்தை அணுகுவதற்கு முன்னர், நீங்கள் தேவனிடத்தில் என்னுடைய ஜீவியத்தை ஆராய்ந்தறியும்படிக்கு கேட்டுக் கொள்ளுங்கள். நான் சரியில்லாத எந்தக் காரியத்தையாவது செய்திருப்பேனேயானால், அதற்காக என்னை மன்னிப்பார். நான்—நான் அதைச் செய்ய வேண்டும் என்று செய்கிறதில்லை. அவர் அதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது நான் அதைச் சரிசெய்து கொள்வேன். நான் உங்களுக்காகவும் அதேக் காரியத்தைக் கேட்டுக் கொள்வேன். அதாவது, “நீங்கள் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “ஒருவருக்காக ஒருவர் காத்திருந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்” என்பதாகும். 160 நாம் இந்த இராபோஜனத்தில் பங்குபெற விரும்புகிறோம். நாம் அதில் பங்கு பெறவில்லையென்றால், அப்பொழுது நமக்கு அவரோடு பங்கில்லை. அதைத்தான் அவர் கூறினார். முலாவது…இல்லை, பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரம். 161 இப்பொழுது நாம் அப்படியே ஜெபிப்போமாக. நான் உங்களுக்காக ஜெபிக்கையில், நீங்களும் எனக்காக மௌனமாக ஜெபியுங்கள். 162 [சபையோர் மௌனமாக ஜெபிக்கும்போது, சகோதரன் பிரான்ஹாமும் மௌனமாக ஜெபிக்கிறார்—ஆசி.] விசுவாசத்தின் மூலமாக, நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே, உம்முடைய ஆவியானது வருவதாக. மனுஷர்களுக்கு விரோதமான எங்களுடைய தப்பிதங்கள் எல்லாவற்றையும் நீர் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். மன்னியும். 163 ஓ கர்த்தாவே, எங்களுடைய ஜெபத்தைக் கேளும். கர்த்தாவே, இதுவே எங்களுடைய மன்னிப்பின் ஜெபமாயுள்ளது. நாங்கள் மன்னிப்பிற்காக ஜெபிக்கிறோம். நாங்கள் இரக்கத்திற்காக ஜெபிக்கிறோம். கர்த்தாவே, எங்களை மன்னியும், உம்முடைய வார்த்தையில், “எங்களுக்கு விரோதமாய்த் தப்பிதங்களைச் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்களுடைய தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்” என்று எழுதப்பட்டுள்ளதே. நீங்கள் அநேகராய்…இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.